எனக்காக கோடிகளை வேணாம்ன்னு சொன்னாரு.. 2019 உலகக் கோப்பையில் தோனியின் நன்றியை பகிர்ந்த சோமி கோலி

MS Dhoni BAS
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாட இந்திய ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனி இப்போதே பயிற்சிகளை துவங்கியுள்ளார். 40 வயதை கடந்தும் கடந்த வருடம் முழங்கால் வலியை தாண்டி சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த அவர் சென்னை ஐந்தாவது கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க உதவினார்.

அந்த வரிசையில் இம்முறை 6வது கோப்பையை வெல்வதற்கான பயணத்தை துவங்கியுள்ள தோனி வலைப் பயிற்சியில் “பிரைம் ஸ்போர்ட்ஸ்” எனும் ஸ்டிக்கரை தன்னுடைய பேட்டில் ஒட்டியுள்ளது ரசிகர்களை திருப்பி பார்க்க வைத்துள்ளது. அதாவது தோனியின் பேட்டுக்கு முதல் முறையாக ஸ்பான்சர்ஷிப்பை வாங்கிக் கொடுத்த பரம்ஜித் சிங் எனும் நண்பர் ராஞ்சியில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் விளையாட்டு உபகரணங்கள் கடையை நடத்தி வருகிறார்.

- Advertisement -

மறக்காத தோனி:
எனவே ஆரம்பக் காலங்களில் தமக்கு உதவிய அவருடைய கடையை பிரபலப்படுத்துவதற்காக தோனி தற்போது பிரைம் ஸ்போர்ட்ஸ் எனும் ஸ்டிக்கரை பேட்டில் ஒட்டியுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. முன்னதாக “பிஏஎஸ்” எனப்படும் “பீட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்” எனும் விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து தான் முதல் முறையாக தோனியின் பேட்டுக்கு பரம்ஜித் சிங் ஸ்பான்சர்ஷிப்பை வாங்கிக் கொடுத்தார்.

அந்த விவரத்தை 2016ஆம் ஆண்டு வெளியான எம்எஸ் தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் ரசிகர்களால் பார்க்க முடியும். அந்த ஸ்பான்சர்ஷிப் கொண்ட பேட்டை பயன்படுத்தி தான் கடந்த 2004இல் அறிமுகமான தோனி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தையும் அடித்தார். பின்னர் ரீபோக், ஸ்பார்டன் போன்ற நிறைய முன்னணி நிறுவனங்கள் பல கோடி ரூபாய்களை கொடுத்து தோனியின் பேட்டுக்கு ஸ்பான்சர்களாக இருந்தனர்.

- Advertisement -

ஆனால் ஆரம்பக் காலத்தில் தாம் செய்த உதவிக்காக 2019 உலகக் கோப்பையில் மீண்டும் பிஏஎஸ் ஸ்பான்சர்ஷிப் ஸ்டிக்கரை ஒரு ரூபாய் கூட பெறாமல் தோனி பயன்படுத்தியதாக அதன் நிறுவனர் சோமி கோலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “தோனி பணத்தைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. உங்களுடைய ஸ்டிக்கரை என்னுடைய பேட்டில் போட்டு அனுப்புங்கள் என்று மட்டுமே என்னிடம் சொன்னார்”

இதையும் படிங்க: 2016இல் நடந்ததை மறக்கல.. 3வது டெஸ்டில் இந்தியாவை வீழ்த்தும் திட்டம் பற்றி பென் ஸ்டோக்ஸ் பேட்டி

“இருப்பினும் எனக்காக அவர் வேறு நிறுவனங்களின் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை வேண்டாம் என்று சொன்னார். அதற்காக தோனியின் மனைவி, அப்பா, அம்மா ஆகியோர் மட்டுமல்லாமல் பரம்ஜித் சிங்கிடமும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டேன். அதனால் உலகக் கோப்பைக்கு முன்பாக அவர்கள் அனைவரும் தோனியின் வீட்டுக்குச் சென்று அந்த முடிவை வாபஸ் வாங்குமாறு கேட்டனர். ஆனால் இது என்னுடைய முடிவு என்று தோனி எங்களிடம் சொல்லி விட்டார்” என கூறினார்.

Advertisement