2016இல் நடந்ததை மறக்கல.. 3வது டெஸ்டில் இந்தியாவை வீழ்த்தும் திட்டம் பற்றி பென் ஸ்டோக்ஸ் பேட்டி

Ben Stokes 3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்குகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட பெரிய தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. அதற்கு நிகராக இரண்டாவது போட்டியில் வென்ற இந்திய அணி 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

இதை அடுத்து மூன்றாவது போட்டியில் வென்று முன்னிலை பெறுவதற்காக இரு அணிகளும் போராட தயாராகியுள்ளன. இந்த நிலையில் மூன்றாவது போட்டிக்கான தங்களுடைய விளையாடும் 11 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து வழக்கம் போல ஒரு நாள் முன்பாகவே அறிவித்துள்ளது.

- Advertisement -

2016 போட்டி:
அதில் கடந்த போட்டியில் அறிமுகமாகி ஓரளவு நன்றாகவே செயல்பட்ட இளம் ஸ்பின்னர் சோயப் பஷீரை அதிரடியாக நீக்கியுள்ள இங்கிலாந்து நிர்வாகம் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக ராஜ்கோட் மைதானம் வரலாற்றில் எப்போதுமே பேட்டிங்கு சாதகமாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் இம்முறை தயாரிக்கப்பட்டுள்ள பிட்ச் முதல் பார்வையில் ஃபிளாட்டாக இருப்பது போல் நன்றாக தெரிகிறது.

எனவே அதில் நல்ல வேகமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 150 கி.மீ வேகத்தில் வீசி இந்தியா போன்ற எதிரணிகளுக்கு சவாலை கொடுக்கக்கூடிய மார்க் வுட் இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் 2016ஆம் ஆண்டு இதே ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டி டிராவில் முடியும் அளவுக்கு பிட்ச் ஃபிளாட்டாக இருந்ததாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதனால் இப்போதும் அதே போன்ற பிட்ச் இருக்கும் என்று கருதி மார்க் வுட்டை அணிக்குள் கொண்டு வருவதாக கூறியுள்ள அவர் இது பற்றி போட்டிக்கு முன் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “இங்கு நாங்கள் விளையாடிய கடந்த டெஸ்ட் போட்டியிலிருந்து சில பாடங்களையும் தகவல்களையும் எடுத்துள்ளோம். அப்போட்டி நீண்ட காலத்திற்கு முன்பாக நடந்தாலும் பிட்ச் ஃபிளாட்டாக இருந்தது என்பது உண்மையாகும்”

இதையும் படிங்க: உங்களோட பிரச்சனையே வேற.. அதிகமாக யோசிக்காதீங்க.. ரோகித்துக்கு ஆர்பி சிங் சிறிய ஆலோசனை

“அதே பிட்ச்சை இன்று நான் பார்த்த போது மீண்டும் நன்றாக தெரிந்தது. எனவே ஒரு எக்ஸ்ட்ரா வேகபந்து வீச்சாளரை இந்த வாரம் நாங்கள் கொண்டு வருகிறோம். இந்த வாரம் எங்களுடைய வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்துவதற்காக நாங்கள் போட்டிக்கு செல்ல உள்ளோம்” என்று கூறினார். இங்கிலாந்தின் பிளேயிங் லெவன்: ஜாக் கிராவ்லி, பென் டுக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ் (கீப்பர்), ரீஹன் அஹமத், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

Advertisement