இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் வென்று 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தனது சொந்த காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளில் விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
அது போன்ற சூழ்நிலையில் மற்றொரு சீனியர் வீரரான ரோகித் சர்மா பொறுப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களறங்கினார். ஆனால் கேப்டனாக மற்ற வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட வேண்டிய அவர் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் இதர பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கும் வகையில் பேட்டிங் செய்து வருகிறார்.
அதிகம் யோசிக்காதிங்க:
குறிப்பாக இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் 24, 39, 14, 13 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய இங்கிலாந்து வீரர் சோயப் பஷீரிடம் தன்னுடைய விக்கெட்டை பரிசளித்தார். இத்தனைக்கும் 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடி நல்ல ஃபார்மில் இருந்த அவர் இத்தொடரில் இப்படி தடுமாற்றமாக செயல்பட்டு வருவது ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று ரோகித் சர்மா அதிகமாக சிந்திப்பதாலேயே தடுமாறுவதாக ஆர்பி சிங் கூறியுள்ளார். எனவே எதைப் பற்றியும் கவலைப்பட்டு அதிகமாக யோசிக்காமல் இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே உங்களால் அசத்த முடியும் என்று ரோகித்துக்கு ஆலோசனை தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.
“ரோகித் சர்மா அதிகப்படியாக சிந்திக்கிறார். குறிப்பாக சில முக்கிய வீரர்கள் இல்லாததால் போட்டியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக அவர் எப்படியாவது பெரிய இன்னிங்ஸ் விளையாடி 2 – 3 பார்ட்னர்ஷிப் அமைக்க அதிகமாக முயற்சிக்கிறார். அதை செய்வதில் அவர் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறார். பொதுவாக அவர் அப்படி விளையாடக்கூடிய வீரர் இல்லை. அவருடைய பேட்டிங் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்”
இதையும் படிங்க: அது உண்மையில்ல.. இந்திய அணியில் என்னை ஓரங்கட்ட தப்பான செய்தி பரப்பீட்டாங்க.. வருண் சக்ரவர்த்தி வருத்தம்
“ஆனால் தற்போது அவருடைய ஆட்டத்தில் சுதந்திரமான அதிரடியை காண முடியவில்லை. எனவே அதிக எச்சரிக்கையுடன் ரோகித் சர்மா செயல்பட்டால் ஒரு நல்ல பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அசத்த முடியாது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.