மேட்ச் ஸ்டார்டாகும் முன்பே எதிரணிகளை அவர் பயப்பட வைக்கிறாரு.. இந்திய வீரருக்கு பின்ச் பாராட்டு

Aaron Finch
Advertisement

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய 9 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அதனால் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக சாதனை படைத்துள்ள இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று 2011 போல மண்ணில் கோப்பையை வெல்லாமல் நிற்க மாட்டோம் என்ற வகையில் அதிரடியாக செயல்பட்டு வருகிறது.

இந்த வெற்றிகளுக்கு விராட் கோலி, ஷமி, ஜடேஜா உட்பட அனைத்து துறைகளிலும் இருக்கும் அனைத்து வீரர்களும் மிகச்சிறப்பாக விளையாடி தங்களுடைய பங்காற்றி வருகிறார்கள். ஆனால் அவர்களை சரியாக வழி நடத்தும் ரோகித் சர்மா எதிரணிகளை மிரட்டும் அளவுக்கு கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங்கில் அசத்தி வருகிறார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

எதிரணிகளை பயமுறுத்துறாரு:
குறிப்பாக துவக்க வீரராக களமிறங்கும் அவர் இந்தியாவுக்கு நல்ல அடித்தளத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் தம்முடைய சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விடுகிறார். அந்த ஸ்டைலிலேயே இந்த உலகக் கோப்பையில் இதுவரை 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ள அவர் பெரும்பாலான போட்டிகளில் நல்ல துவக்கத்தை கொடுத்ததன் காரணமாகவே விராட் கோலி, ராகுல் போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி பெரிய ரன்களை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேரம் செல்ல செல்ல மைதானங்கள் பேட்டிங்க்கு சவாலாக மாறும் என்பதை உணர்ந்து ஆரம்பத்திலேயே அதிரடியான துவக்கத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் ரோகித் சர்மா விளையாடுவதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பாராட்டியுள்ளார். குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் ரோஹித் சர்மா விளையாடும் அதிரடியான ஆட்டம் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே எதிரணிகளுக்கு மத்தியில் பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பின்ச் பேசியது பின்வருமாறு. “தன்னுடைய அணிக்காக வேகமான துவக்கத்தை கொடுக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா முயற்சிப்பதே அவருடைய அதிரடியான செயல்பாடுகளுக்கான பின்னணியாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் மைதானங்கள் நேரம் செல்ல செல்ல மெதுவாக மாறுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி எதிரணி மீது ஆரம்பத்திலேயே அழுத்தத்தை போடுவது மிகவும் முக்கியமாகும”

இதையும் படிங்க: இன்னைக்கு இலங்கை தரைமட்டமாகி கிடக்க இந்தியாவை சேர்ந்த அவர் தான் காரணம்.. ரணதுங்கா விமர்சனம்

“இதன் காரணமாக எதிரணி பவுலர்களின் மனமும் திட்டமும் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே மாறுகிறது. குறிப்பாக எதிரணிகள் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்குவார் என்று பதற்றமடைகின்றனர். அதன் காரணமாக ஆரம்பக்கட்ட ஓவர்களிலேயே அவருக்கு எதிராக எதிரணிகள் அட்டாக் செய்யாமல் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர். அதை பயன்படுத்தி ரோகித் சர்மா இந்தியாவுக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்து வருகிறார்” என்று கூறினார்.

Advertisement