ஹாங்காங் அணிக்கெதிராக ரோஹித் போட்ட புது திட்டம். எல்லாம் வீணாப்போச்சு – நடந்தது என்ன?

Rohith
- Advertisement -

ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் இரண்டாவது லீக் ஆட்டமாக இன்று ஹாங்காங் அணிக்கு எதிராக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்த தொடரில் ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் பலம் குறைந்த ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணியில் ஏதாவது ஒரு மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடந்த போட்டியில் விளையாடிய ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

INDvsHK-1

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோரது நிதானமான துவக்கம் காரணமாக பொறுமையாக ரன்களை சேர்த்து வந்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி முதல் 10 ஓவர்களில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. ஆனால் ரோகித் சர்மா 21 ரன்னிலும், கே.எல் ராகுல் 36 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறிய பின்னர் நிலைத்து நின்று ஆடிய கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் அணியின் ரன் குவிப்பை வெகுவாக உயர்த்தினார்கள்.

அதிலும் குறிப்பாக சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 68 ரன்களை அடித்து அசத்தினார். அவருடன் உறுதுணையாக விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 59 ரன்களை குவித்து அசத்தினார். இதன் காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 அவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டை மட்டும் இழந்து 192 ரன்கள் குவித்தது.

RIshabh Pant Dinesh Karthik

பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹாங்காங் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கான தங்களது வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு தற்போது வீணாகியுள்ளது சமூகவலைதளத்தில் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. அதன்படி இன்றைய போட்டியில் ஹார்டிக் பாண்டியாவிற்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க : நான் இறந்துவிட்டதாக கூட சொன்னாங்க – சமூக வலைதள வதந்திகளால் நட்சத்திர இந்திய வீரர் வேதனை

இதற்கு காரணம் யாதெனில் இனிவரும் போட்டிகளில் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்வதற்காக இந்த போட்டியில் இருவரையும் விளையாட வைத்து ரோஹித் சோதித்து பார்க்க நினைத்தார். ஆனால் இந்த போட்டியில் அவர்கள் இருவருக்குமே பேட்டிங் செய்ய ஒரு பந்து கூட வாய்ப்பு கிடைக்காததால் அந்த திட்டம் வீணாய் போனது குறிப்பிடத்தக்கது.

Advertisement