நான் இறந்துவிட்டதாக கூட சொன்னாங்க – சமூக வலைதள வதந்திகளால் நட்சத்திர இந்திய வீரர் வேதனை

Jadeja
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரில் குரூப் பி பிரிவில் தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ஆகஸ்ட் 31-ம் தேதியான இன்று தனது 2வது லீக் போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. முன்னதாக துபாயில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக முஹம்மது ரிஸ்வான் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

Ravindra Jadeja Hardik Pandya

- Advertisement -

அதை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தாலும் ரோகித் சர்மா 12, விராட் கோலி 35, சூரியகுமார் யாதவ் 18 என முக்கிய வீரர்கள் கணிசமான ரன்களை எடுத்தனர். இறுதியில் 5வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதிசெய்த ரவீந்திர ஜடேஜா 35 (29) ரன்களில் ஆட்டமிழக்க அவருடன் பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக 33* (17) ரன்களை எடுத்து பினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார்.

அசத்திய ஜடேஜா:
முன்னாதாக இந்த பரபரப்பான போட்டியில் ரோகித் சர்மா அவுட்டானதும் விராட் கோலியுடன் இடதுகை பேட்ஸ்மேன் விளையாட வேண்டும் என்பதற்காக சூரியகுமார் யாதவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். ஆனால் அடுத்த சில ஓவர்களிலேயே விராட் கோலியும் சூரியகுமாரும் அவுட்டானதால் ஏற்பட்ட அழுத்தத்தை சமாளித்து அற்புதமாக செயல்பட்ட ஜடேஜா நிதானமாகவும் தேவைப்படும்போது அதிரடியாகவும் செயல்பட்டு 4 பவுண்டரி 1 சிக்சருடன் வெற்றியை உறுதி செய்து கடைசி ஓவரில் அவுட்டானார்.

Ravindra Jadeja IND vs ENg

சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் மொத்தமாக சொதப்பியதால் வெளியேறிய அவர் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் அதன் பின் நடந்த இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய அவர் இந்த அழுத்தமான போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் ஃபார்முக்கு திரும்பி தன்னை நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக நிரூபித்துள்ளார்.

- Advertisement -

இறந்து விட்டதாக:
இந்நிலையில் ஒரு கட்டத்தில் டி20 உலகக் கோப்பையில் விளையாட மாட்டீர்கள் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது மீண்டும் பழைய இடத்தை பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படும் தன்னம்பிக்கை எவ்வாறு கிடைத்தது என இந்த போட்டி முடிந்த பின் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜடேஜா ஒரு முறை தாம் இறந்து விட்டதாக கூட செய்தி வந்ததாகவும் அதையெல்லாம் செவியில் வாங்காமல் தொடர்ந்து தனது வேலையை செய்து வருவதாகவும் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

Jadeja-1

“டி20 உலக கோப்பைக்கு தேர்வாக மாட்டேன் என்ற சிறிய எடுத்துக்காட்டை (வதந்தி) நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆனால் அதற்கிடையே நான் இறந்து விட்டதாகவும் ஒரு வதந்தி வந்தது. அந்த வதந்தியை விட வேறு எதுவும் பெரிதாக இருக்க முடியாது. எனவே நான் எப்போதுமே இதையெல்லாம் நினைப்பதில்லை. மேலும் நான் எப்போதும் களத்திற்கு சென்று நாட்டுக்காக சிறப்பாக செயல்படுவதிலேயே எனது கவனத்தை செலுத்துகிறேன்”

- Advertisement -

“எனது அணிக்கு சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான அம்சங்களில் நான் முன்னேற்றமடைய விரும்புகிறேன். அவ்வளவுதான். ஒவ்வொரு நாளும் நான் பவுலிங், பேட்டிங் மற்றும் பீல்டிங் போன்றவைகளுக்கு பயிற்சி எடுக்கிறேன். நாங்கள் எப்போதும் நேர்மறையான கிரிக்கெட்டை விளையாடி எங்களுடைய சிறந்தவற்றை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சிக்கிறோம். ஒவ்வொரு போட்டியிலும் எங்களுடைய வேலையை கச்சிதமாக முடிப்பதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

Jadeja

மேலும் உலகக்கோப்பை இன்னும் வெகு தொலைவில் உள்ளதால் தற்போதைக்கு ஹாங்காங்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அதன்பின் எந்த அணி யாருடன் மோதப் போகிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs HK : ஹாங்காங் அணிக்கெதிரான போட்டியில் பாண்டியா நீக்கப்பட்டது ஏன்? – கேப்டன் ரோஹித் விளக்கம்

கடந்த 2019 உலக கோப்பைக்கு பின் பேட்டிங்கில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டுள்ள ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறுகிறார். அதனால் டி20 உலகக் கோப்பையில் அவரை தேர்வு செய்யக்கூடாது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்ற முன்னாள் வீரர்கள் கூறினாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் இந்த ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு தனது ஆட்டத்தை முன்னேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்துவதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.

Advertisement