IND vs HK : ஹாங்காங் அணிக்கெதிரான போட்டியில் பாண்டியா நீக்கப்பட்டது ஏன்? – கேப்டன் ரோஹித் விளக்கம்

Hardik Pandya and Rohit Sharma
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கடந்த ஆண்டு ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் இரண்டாவது ஆட்டமாக இன்று ஆகஸ்ட் 31-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் ஹாங்காங் அணியை எதிர்த்து இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது.

INDvsHK-1

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்திய அணியை காட்டிலும் பல மடங்கு பலம் குறைந்த ஹாங்காங் அணிக்கு எதிராக வேறு யாராவது வீரருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் கடந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் கடைசி நேரத்தில் 17 பந்துகளில் 33 ரன்களையும் அடித்து சிறப்பான பினிஷிங் கொடுத்த ஹார்டிக் பாண்டியா இன்றைய ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.

அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் விளையாடுகிறார் என்றும் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியின் இன்றைய டாசுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் அறிவித்தார். டாசுக்கு பிறகு பாண்டியாவின் இந்த நீக்கம் குறிக்கும் ரோஹித் சர்மா சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்களும் முதலில் பந்து வீச தான் நினைத்தோம். ஆனால் நாங்கள் இன்று முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம்.

Hardik Pandya

இருந்தாலும் இந்த மைதானத்தில் நல்ல ஸ்கோரை அடித்து எங்களால் ஹாங்காங் அணியை நிறுத்த முடியும் என்று நினைக்கிறோம். அதோடு எந்த அணிக்கு எதிராகவும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவே விரும்புகிறோம். அடித்தளம் சிறப்பாக அமைந்தால் தான் முடிவுகள் நமக்கு சரியாக கிடைக்கும். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி.

- Advertisement -

இந்த போட்டியில் ஒரே ஒரு மாற்றமாக ஹார்டிக் பாண்டியாவிற்கு ஓய்வு வழங்க நினைக்கிறோம். ஏனெனில் அவர் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமான வீரர் என்பது நமக்கு தெரியும். அடுத்தடுத்த போட்டிகளுக்கு அவரின் பங்களிப்பு முக முக்கியம் என்பதால் அந்த வகையில் தான் அவருக்கு இந்த ஓய்வினை வழங்கி ரிஷப் பண்ட்டை அணியில் சேர்த்துள்ளதாக ரோகித் சர்மா தெரிவித்தார்.

இதையும் படிங்க : வேண்டாம் தம்பி நல்ல பார்மில் இருக்கீங்க நடிகையுடன் சேர்ந்து கெட்டுப்போகாதீங்க – இளம் வீரருக்கு ரசிகர்கள் அட்வைஸ்

அதன்படி தற்போது இந்திய அணி முதலில் விளையாடி முடித்த வேளையில் 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்துள்ளது. பின்னர் தற்போது 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement