வேண்டாம் தம்பி நல்ல பார்மில் இருக்கீங்க நடிகையுடன் சேர்ந்து கெட்டுப்போகாதீங்க – இளம் வீரருக்கு ரசிகர்கள் அட்வைஸ்

Shuman Gill
- Advertisement -

இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் 11 பேர் கொண்ட கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு ஏராளமான போட்டிகள் இருப்பது வழக்கமாகும். அதில் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே தொடர்ச்சியாக சர்வதேச அளவில் நாட்டுக்காக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து தாமும் புகழ் பெற்று வாழ்வில் பெரிய அளவில் முன்னேற முடியும். அதற்கு சிறந்த செயல்பாடுகள் என்பதையும் தாண்டி வீரர்களின் வெற்றியை தடுப்பதற்கு நிறைய சவால்களும் தாமாகவே வரும். ஆனால் அதில் கவனம் செலுத்தாமல் வேலையை மட்டும் செய்தாலே மற்ற அனைத்தும் தாமாக வரும் என்பது இளம் வீரர்களுக்கு பொருந்தக் கூடிய ஒன்றாகும்.

அந்த வகையில் தற்போதைய இந்திய அணியில் தனது சிறந்த திறமைகளால் ஜொலிக்க துவங்கியுள்ள இளம் வீரர் சுப்மன் கில் வருங்கால இந்திய பேட்டிங் துறையின் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படுகிறார். இந்திய வென்ற 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்று 2019 ஐபிஎல் தொடரில் சிறந்த இளம் வீரர் விருதை வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்டு காயத்தால் வெளியேறினார்.

- Advertisement -

சூப்பரான பார்மில்:
அதன்பின் 2021இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க பார்டர் கவாஸ்கர் கோப்பையில் காபா மைதானத்தில் இந்தியா பதிவு செய்த வரலாற்று வெற்றிக்கு 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் அணியின் பேட்டிங் துறையில் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனாலேயே சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற அவர் 3 போட்டிகளிலும் அட்டகாசமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.

அதன்பின் நடந்த ஜிம்பாப்வே ஒருநாள் தொடரிலும் முதல் முறையாக சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி மீண்டும் தொடர் நாயகன் விருதை வென்ற அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் 22 வயதில் 2 தொடர் நாயகன் விருதுகளை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையும் படைத்தார். இப்படி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் நல்ல இடத்தை பிடித்துள்ள அவர் இன்னும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை கூட பெறாத காரணத்தாலேயே தற்போது ஆசிய கோப்பையிலும் இடம் விளையாடவில்லை.

- Advertisement -

இரண்டு சாரா:
முன்னதாக அவரை போன்ற இளம் கிரிக்கெட் வீரர்கள் நடிகைகள் அல்லது பிரபலங்களுடன் இணைந்து கிசுகிசுக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கரும் இருவரும் காதலிப்பதாக கடந்த சில வருடங்களாகவே இணையத்தில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக ஒருமுறை இரண்டு பேரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே மாதிரியான தலைப்பை பதிவிட்டது அந்த கிசுகிசுப்பை கிட்டத்தட்ட உறுதி செய்தது. அதனால் இவர் களத்தில் சிறப்பாக செயல்படும் போதெல்லாம் சாரா டெண்டுல்கரை ரசிகர்கள் இழுப்பது வழக்கமாகி வருகிறது. அந்த நிலைமையில் தற்போது ஜிம்பாப்வே தொடரை முடித்துக்கொண்டு ஓய்வில் இருக்கும் சுப்மன் கில் பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கானுடன் ஒரு ஹோட்டலில் உணவு அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ரசிகர்கள் அட்வைஸ்:
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி அவர்களது மகன் மற்றும் பாலிவுட் நடிகர் சைப் அலி கான் அவர்களுடைய மகளான இவர் கடந்த 2017 முதல் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் நட்பு ரீதியாக சுப்மன் கில்லுக்கு பார்ட்டி கொடுத்துள்ளாதாக தெரிகிறது. ஆனாலும் வழக்கம் போல இந்த இருவரும் நண்பர்களாகி டேட்டிங் செய்ய துவங்கியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொளுத்தி போட்டுள்ளனர்.

மேலும் பெயரில் “சாரா” என்ற வார்த்தை இருந்தாலே அவர்களிடம் சுப்மன் கில் மயங்கி விடுவதாகவும் ரசிகர்கள் சரமாரியாக கலாய்க்கிறார்கள். ஆனால் வரலாற்றில் சில கிரிக்கெட் வீரர்கள் இப்படி பாலிவுட் நடிகைகள் பின்னாடி சென்று பார்மையும் கிரிக்கெட் வாழ்வையும் இழந்துள்ள நிலையில் இவரும் அவ்வாறு போய் விடக்கூடாது என்பதே உண்மையான ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

இதையும் படிங்க : INDvsPAK : விராட் கோலி இதற்கு முன் இப்படி பண்ணி நான் பார்த்ததே இல்ல – ஆதங்கத்தை வெளிப்படுத்திய சேவாக்

எனவே தற்போது நல்ல பார்மில் இருக்கும் நீங்கள் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான பயிற்சிகளை செய்யுங்கள் இந்த வழி வேண்டாம் ரசிகர்கள் அட்வைஸ் தெரிவிக்கிறார்கள்.

Advertisement