INDvsPAK : விராட் கோலி இதற்கு முன் இப்படி பண்ணி நான் பார்த்ததே இல்ல – ஆதங்கத்தை வெளிப்படுத்திய சேவாக்

Sehwag
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி நடப்பு சாம்பியனாக இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் பரபரப்புக்கு சற்றும் பஞ்சமில்லாமல் இறுதிவரை சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

INDvsPAK

- Advertisement -

அந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியும் துவக்கத்தில் சற்று தடுமாறியது.

ஆனாலும் மிடில் ஆர்டரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த போட்டியின் போது இறுதி கட்டத்தில் மூன்று ஓவருக்கு 32 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது சற்று பதட்டமான சூழ்நிலைதான் தென்பட்டது. ஆனாலும் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

Virat Kohli IND vs PAK

இந்நிலையில் இந்த போட்டியின் போது மீண்டும் பார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 35 ரன்கள் எடுத்து தேவையில்லாத ஒரு ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தார். நல்ல தொடக்கம் கிடைத்தும் அதனை பயன்படுத்தி போட்டியை சரியாக முடித்து கொடுக்க முடியாமல் விராட் கோலி தவறிவிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் கூறுகையில் : இந்திய அணி 150 ரன்கள் வரை சேசிங் செய்யும் போதெல்லாம் விராட் கோலி எப்போதும் இதேபோல் எளிதாக ஆட்டம் இழந்து விடமாட்டார். ஒரு பக்கம் நிலைத்து நின்று இறுதிவரை விளையாடுவார். அவர் இதற்கு முன்னர் இது போன்ற மோசமான ஷாட் விளையாடி ஆட்டமிழந்ததை நான் பார்த்ததில்லை.

இதையும் படிங்க : IND vs HK : இந்திய அணி முதலில் பேட்டிங். இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள ஒரு முக்கிய மாற்றம் – விவரம் இதோ

அதேபோன்று இதுபோன்ற எளிதாக விக்கெட் விழும்படி மோசமான ஷாட் விளையாடி ஒருபோதும் நான் பார்த்ததில்லை. அவரிடம் நாம் தொடர்ந்து பார்த்து பழகிய பேட்டிங்கும் வெளிப்படவில்லை. எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னர் அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவார் என்று எதிர்பார்ப்பதாக சேவாக் தனது ஆதங்கத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement