IND vs HK : இந்திய அணி முதலில் பேட்டிங். இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள ஒரு முக்கிய மாற்றம் – விவரம் இதோ

INDvsHK-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் 6 நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் ஆசிய கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்களது வெற்றி கணக்கை துவங்கியுள்ளது.

INDvsHK

இந்நிலையில் இந்திய அணியின் இரண்டாவது போட்டியாக இன்று ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஹாங்காங் அணியை எதிர்த்து தற்போது விளையாடி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அணியாக திகழும் இந்திய அணி அனுபவமற்ற ஹாங்காங் அணியை இன்று எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டி சற்று முன்னர் துபாய் சர்வதேச மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததன் காரணமாக தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Rishabh Pant and Hardik Pandya

இந்திய அணியை விட பலம் குறைந்த அணியாக பார்க்கப்படும் ஹாங்காங் அணிக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இன்று இருக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அணியில் ஒரே ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த போட்டியின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா இந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மான ரிஷப் பண்ட் அணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு மாற்றத்தை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் அணியில் செய்யப்படவில்லை. ஹாங்காங் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அன்று காயத்தால் சாய்ந்த அதே மைதானத்தில் இன்று வாழ்நாளின் சிறந்த கம்பேக் கொடுத்த பாண்டியா – தரவரிசையில் புதிய சாதனை

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) தினேஷ் கார்த்திக், 7) ரவீந்திர ஜடேஜா, 8) புவனேஷ்வர் குமார், 9) ஆவேஷ் கான், 10) அர்ஷ்தீப் சிங், 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement