முடிவுக்கு வந்த ரோஹித்தின் வெற்றிநடை.. வங்கதேசத்துக்கு எதிராக மோசமான சாதனை – 2007 உ.கோ பின் இந்தியா பரிதாப தோல்வி

Rohit Sharma IND vs BAN
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற கடைசி சூப்பர் 4 போட்டியில் இந்தியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. குறிப்பாக அடுத்தடுத்த தோல்விகளால் ஏற்கனவே இத்தொடரிலிருந்து வெளியேறிய அந்த அணியிடம் அடுத்தடுத்து வெற்றிகளால் முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா தோல்வியை சந்தித்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

கொழும்புவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 265/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சாகிப் அல் ஹசன் 80 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 3 விக்கெட்கள் எடுத்தார். அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 0, திலக் வர்மா 5, கேஎல் ராகுல் 19, இசான் கிசான் 5, சூரியகுமார் யாதவ் 16, ரவீந்திர ஜடேஜா 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

வரலாற்று தோல்வி:
அதனால் சுப்மன் கில் 121, அக்சர் படேல் 42 ரன்கள் எடுத்தும் 49.5 ஓவரில் 259 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா பரிதாபமாக தோற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சிலும் அசத்திய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிர் ரஹ்மான் 3 விக்கெட் எடுத்தார். மேலும் இதன் வாயிலாக ஆசிய கோப்பையில் சச்சின் 100வது சதமடித்த 2012 போட்டிக்கு பின் 11 வருடங்கள் கழித்து முதல் முறையாக வங்கதேசத்திடம் இந்தியா தோற்றது.

அதை விட ஒருநாள் கிரிக்கெட்டில் 16 வருடங்கள் கழித்து முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் கத்துக்குட்டியாக கருதப்படும் வங்கதேசத்திடம் இந்திய அவமான தோல்வியை சந்தித்தது. ஏனெனில் கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 2007 உலகக் கோப்பையில் யாருமே மறக்க முடியாத அளவுக்கு வங்கதேசத்திடம் இந்தியா படுதோல்வி சந்தித்திருந்தது.

- Advertisement -

அது போக இந்த தோல்வியால் ஒருநாள் ஆசிய கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே பெற்று வந்த கேப்டன் ரோகித் சர்மா முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளார். அதாவது 50 ஓவர் ஆசிய கோப்பையில் இதற்கு முன் 9 போட்டிகளில் ரோகித் தலைமையில் 8 வெற்றிகளை இந்தியா பதிவு செய்தது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. அந்த வெற்றி நடை நேற்று முடிவுக்கு வந்து 9 போட்டிகளுக்கு பின் முதல் முறையாக ரோகித் சர்மா ஆசிய கோப்பையில் தோல்வி பதிவு செய்தார்.

இதையும் படிங்க: ஆசியக்கோப்பை வரலாற்றில் 13 போட்டிகளில் இதுவே முதல்முறை. இந்திய அணிக்கு எதிராக சாதனை படைத்த பங்களாதேஷ்

அது போக சர்வதேச கிரிக்கெட்டில் கத்துக்குட்டியாக கருதப்படும் வங்கதேசத்திற்கு எதிராக அதிக தோல்விகளை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோகித் சர்மா : 4
2. எம்எஸ் தோனி : 3
3. ராகுல் டிராவிட் மற்றும் சௌரவ் கங்குலி : தலா 1

Advertisement