ஆசியக்கோப்பை வரலாற்றில் 13 போட்டிகளில் இதுவே முதல்முறை. இந்திய அணிக்கு எதிராக சாதனை படைத்த பங்களாதேஷ்

Bangladesh
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பு மைதானத்தில் நடப்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டமானது நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணி இந்திய அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி துவக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் அனுபவ வீரரான ஷாகிப் அல் ஹசன் (80), மற்றும் இளம் வீரரான தவ்ஹித் ஹிரிடாய் (54), நசும் அகமது (44) ஆகியோரின் சிறப்பான ஆட்டம் காரணமாக 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 266 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் இருந்தே பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஒருபுறம் சுப்மன் கில் மட்டும் 121 ரன்கள் குவித்து அசத்தினாலும் அவருக்கு மிடில் ஆர்டரில் எந்த ஒரு வீரரும் கைகொடுக்கவில்லை.

இறுதி நேரத்தில் அக்சர் பட்டேல் 34 பந்துகளை சந்தித்து 42 ரன்களை எடுத்த போதிலும் அவரால் போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்க முடியவில்லை. இந்திய அணி இறுதியாக 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக பங்களாதேஷ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம் பங்களாதேஷ் அணியானது ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை இந்திய அணிக்கு எதிராக படைத்துள்ளது.

இதையும் படிங்க : மீண்டும் வேலையை ஆரம்பித்த ரோஹித் சர்மா.. 35 வருடத்துக்கு பின் டக் அவுட்டாவதில் 3 மோசமான சாதனை.. லிஸ்ட் இதோ

அந்த வகையில் இதுவரை ஆசியக் கோப்பை தொடரின் ஒருநாள் போட்டிகளில் 13 முறை இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தற்போது தான் முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்து இந்திய அணியை வீழ்த்தியுள்ளது. எதிர்வரும் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா போன்ற ஒரு அணியை வீழ்த்தியுள்ளதால் நாங்கள் எவ்வளவு டேஞ்சரான அணி என்பது அனைவருக்கும் தெரிய வந்திருக்கும் என்று கூட பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் போட்டி முடிந்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement