மீண்டும் வேலையை ஆரம்பித்த ரோஹித் சர்மா.. 35 வருடத்துக்கு பின் டக் அவுட்டாவதில் 3 மோசமான சாதனை.. லிஸ்ட் இதோ

- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இருப்பினும் இத்தொடரிலிருந்து வெளியேறிய வங்கதேசத்தை தன்னுடைய கடைசி போட்டியில் எதிர்கொண்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. கொழும்புவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் சாகிப் அல் ஹசன் 80, தவ்ஹீத் ஹ்ரிடாய் 54 ரன்கள் எடுத்த உதவியுடன் 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

மறுபுறம் 59/4 என சுமாரான துவக்கத்தைப் பெற்ற வங்கதேசத்தை ஆல் அவுட் செய்ய முடியாத அளவுக்கு சுமாராகவே செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை துரத்திய இந்தியாவுக்கு துவக்க வீரர் சுப்மன் கில் 121 (133) ரன்கள் குவித்து போராடிய போதிலும் எதிர்ப்புறம் கேப்டன் ரோகித் சர்மா 0, திலக் வர்மா 5, ராகுல் 19, இஸான் கிசான் 5, சூரியகுமார் யாதவ் 26, ரவீந்திர ஜடேஜா 7 என முக்கிய வீரர்கள் யாருமே கை கொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

சொதப்பிய கேப்டன்:
அதனால் கடைசியில் அக்சர் பட்டேல் 42 (34) ரன்கள் எடுத்தும் 49.5 ஓவரில் இந்தியாவை 259 ரன்களுக்கு சுருட்டி வென்ற வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிஷூர் ரஹ்மான் 3 விக்கெட்கள் எடுத்தார். முன்னதாக சமீப காலங்களாகவே சற்று தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் அரை சதங்கள் அடித்து சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றினார்.

அதனால் உலகக்கோப்பைக்கு முன்பாக ஃபார்முக்கு திரும்பி விட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ந்த நிலையில் மீண்டும் வேலையை ஆரம்பித்தது போல் இந்த போட்டியில் 266 ரன்கள் துரத்தும் போது அறிமுக பவுலர் டன்ஜிம் ஹசன் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட்டான அவர் ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி தோல்விக்கான அடித்தளத்தை அமைத்தார்.

- Advertisement -

1. சொல்லப்போனால் இதன் வாயிலாக ஆசிய கோப்பை வரலாற்றில் 35 வருடத்திற்கு பின் ஒரு போட்டியில் டக் அவுட்டான இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1988 ஆசிய கோப்பையில் அப்போதைய கேப்டன் திலீப் வெங்சர்க்கார் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் டக் அவுட்டானதே கடைசியாகும்.

2. அத்துடன் ஏற்கனவே 2 முறை டக் அவுட்டாகியிருந்த அவர் இதையும் சேர்த்து ஆசிய கோப்பை வரலாற்றில் 3 முறை டக் அவுட்டான முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையும் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: என்னோட முதல் அறிமுக போட்டியிலேயே அவரை மாதிரி ஒரு பிளேயரை வீழ்த்தியது கனவு மாதிரி இருக்கு – வங்கதேச வீரர் நெகிழ்ச்சி

3. அதில் 2 முறை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக 0 ரன்களில் டக் அவுட்டான ஆசிய கோப்பை வரலாற்றில் 2 முறை டக் அவுட்டான முதல் இந்திய துவக்க வீரர் என்ற மற்றுமொரு பரிதாப சாதனையும் படைய்துள்ளார்.

Advertisement