என்னோட அடுத்த இலக்கு இதுதான். ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் – ரோஹித் சர்மா கூறிய கருத்து

Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. கடந்த சில நாட்களாகவே இந்திய அணி பெற்ற இந்த தோல்வி குறித்துதான் அதிகளவு பேசப்பட்டு வருகிறது.

அதோடு இந்திய அணி இந்த இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வி வீரர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையுமே வருத்தம் அடையச் செய்துள்ளது. மேலும் இந்திய அணி அடைந்த தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்களும் இருந்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் தற்போது 36 வயதை எட்டியுள்ள ரோகித் சர்மா இனியும் 3 விதமான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாட முடியாது என்பதனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா விரைவில் ஓய்வுபெற இருக்கிறார் என்ற ஒரு தகவலும் வெளியானது.

மேலும் தேர்வுக்குழுவினரிடம் தன்னை டி20 அணியில் தேர்வு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்று கூறியதாகவும் ஒரு தகவல் வெளியானது. இதன் காரணமாக இனி இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று நினைத்து ரசிகர்கள் அனைவரும் வருத்தமடைந்தனர்.

- Advertisement -

இவ்வேளையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ரோகித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் நிச்சயம் அடுத்த ஆண்டு 2024-ல் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட ஆர்வமாக காத்திருப்பதாக ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : உண்மையாவே ரோஹித் சர்மாவை நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஏன் தெரியுமா? – சோயிப் அக்தர் பேட்டி

இது குறித்து கூறிய அவர் கூறுகையில் : நாங்கள் அங்கு சென்று டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட காத்திருக்கிறோம். அடுத்த ஜூன் மாதம் அங்கு (அமெரிக்கா) டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. அந்த தொடருக்காக நான் காத்திருக்கிறேன் நிச்சயம் அந்த தொடரில் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் எங்களது அணி செயல்படும் என்று ரோகித் சர்மா கூறியதால் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் விளையாடிய பிறகே அவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

Advertisement