நீங்க விளையாடியது போதும், பேசமா அதையே செய்ங்க – வெ.இ தொடரில் ரோஹித்துக்கு பிசிசிஐ செக் வைத்த ரிப்போர்ட் இதோ

TEam India Rohit Sharma
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டனில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்த இந்தியா தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோற்று வெறும் கையுடன் நாடு திரும்பியது. முன்னதாக கடந்த 2014 முதல் இந்தியாவை தொடர்ந்து நம்பர் ஒன் அணியாக வெற்றி நடை போட வைத்து வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்த விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் பதவி விலகிய பின் பொறுப்பேற்ற ரோஹித் சர்மா வழக்கம் போல இருதரப்பு அசத்தினாலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் வெற்றியை பதிவு செய்யத் தவறினார்.

Rohit

- Advertisement -

அதனால் ஏற்கனவே ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் கடந்த 2022 ஜனவரியிலேயே டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் காயத்தால் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவில்லை. அதன் காரணமாக முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் இந்த மாபெரும் ஃபைனலில் கேப்டனாக செயல்பட்ட அவர் டாஸ் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்தாமல் அஸ்வின் போன்ற தரமான வீரரை தேர்வு செய்யாமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்தார்.

விளையாடியது போதும்:
அதை விட நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவானாக போற்றப்படும் அவர் விராட் கோலி, புஜாரா சொதப்பிய நிலையில் கேப்டனாக முன்னின்று ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டது தோல்வியை கொடுத்தது. அதனால் நிறைய ரசிகர்கள் அவர் பதவி விலக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். முன்னதாக ஒரு காலத்தில் அதிரடியாக விளையாடி ஹிட்மேன் என்று பெயரெடுத்த அவர் சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு வரும் நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் அதிக டக் அவுட்டான வீரராக மோசமான சாதனை படைத்தார்.

Rohit Sharma 2

அத்துடன் கேப்டனாக பொறுப்பேற்றது முதலில் சுமாரான ஃபிட்னெஸ் கடைபிடித்து அடிக்கடி ஓய்வெடுக்கும் அவரால் வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த வருடம் 7 வெவ்வேறு கேப்டன்களை பயன்படுத்த வேண்டிய அவலம் இந்தியாவுக்கு ஏற்பட்டதை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் அடுத்ததாக வரும் ஜூலை மாதம் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஏதேனும் ஒரு பகுதியில் ரோகித் சர்மாவை ஓய்வெடுக்க வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக 2 டெஸ்ட் போட்டிகளும் அடுத்ததாக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களும் நடைபெறுகிறது. அந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் புதிய டெஸ்ட் கேப்டனை நியமிக்க முடிவெடுத்துள்ள பிசிசிஐ ஏற்கனவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை உருவாக்கும் வேலைகளை துவங்கியுள்ளது. அதன் காரணமாக நீங்கள் விளையாடியது போதும் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் வழக்கம் போல ஓய்வெடுக்குமாறு ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

IND vs WI Nicholas Pooran Rohit Sharma

இது பற்றி பிசிசிஐக்கு நெருக்கமான பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகி பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரிலும் சரி இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் சரி ரோகித் சர்மா சற்று தடுமாற்றமாகவே செயல்பட்டது தெளிவாக தெரிந்தது. எனவே அவர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் ஓய்வெடுப்பதை தேர்வு குழுவினர் விரும்புகின்றனர். குறிப்பாக டெஸ்ட் தொடர் அல்லது வெள்ளை பந்து தொடர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அவர் தவற விட உள்ளார். அது பற்றிய இறுதி முடிவை ரோகித் சர்மாவிடம் பேசி தேர்வுக் குழுவினர் எடுக்க உள்ளனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க:அந்த 5 பேரை மறந்துட்டீங்களா? என்னை மட்டும் குறை சொல்லாதீங்க – ராயுடுவுக்கு எம்எஸ்கே பிரசாத் பதிலடி

இதை தொடர்ந்து சமீப காலங்களாகவே தடுமாறி வரும் ரோஹித்துக்கு பதிலாக ஏற்கனவே 3 வகையான உள்ளூர் தொடர்களிலும் 2023 தொடரிலும் 625 ரன்களை விளாசி சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக விளையாட போராடி வரும் இளம் இடது கை பேட்ஸ்மேன் யசஸ்வி ஜெய்ஸ்வால் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement