அந்த 5 பேரை மறந்துட்டீங்களா? என்னை மட்டும் குறை சொல்லாதீங்க – ராயுடுவுக்கு எம்எஸ்கே பிரசாத் பதிலடி

- Advertisement -

கோடைகாலத்தில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்த எம்எஸ் தோனி தலைமையிலான சென்னைக்காக விளையாடிய நட்சத்திர வீரர் அம்பாத்தி ராயுடு ஃபைனலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி கோப்பையை வென்று கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். ஹைதராபாத்தை சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி 2010ஆம் ஆண்டு மும்பைக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி 2013 சீசனில் கோப்பையை வெல்ல உதவினார். அதனால் இந்தியாவுக்காக அறிமுகமாகி ஆரம்பத்தில் அசத்த தவறிய அவர் 2015, 2017 ஐபிஎல் சீசன்களில் மும்பை சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.

Rayudu

- Advertisement -

அதை விட 2018 சீசனில் 602 ரன்கள் குவித்து சென்னை 3வது கோப்பையை வெல்ல உதவிய அவர் இந்தியாவுக்காக மீண்டும் கம்பேக் கொடுத்து கிடைத்த வாய்ப்புகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2019 உலகக்கோப்பை விளையாட தகுதியானவராக காத்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் 4வது இடத்தில் விளையாடுபவர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என 3 துறைகளிலும் அசத்தும் முப்பரிமாண வீரராக இருக்க வேண்டும் என கருதிய அப்போதைய எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு தமிழகத்தின் விஜய் சங்கரை தேர்வு செய்து ராயுடுவை கழற்றி விட்டு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டும் தேர்ந்தெடுத்தது.

பிரசாத் பதிலடி:
அதனால் ஏமாற்றமடைந்த நாயுடு “உலகக் கோப்பைகளை பார்க்க 2 முப்பரிமான கண்ணாடிகள் ஆர்டர் செய்துள்ளதாக” போட்ட ட்விட்டை வன்மமாக எடுத்துக்கொண்ட தேர்வுக்குழு விஜய் சங்கர் காயமடைந்த போது ராயுடுவை தேர்ந்தெடுக்காமல் மயங் அகர்வாலை இங்கிலாந்துக்கு அனுப்பி பழி வாங்கியது. அதனால் மனமுடைந்த ராயுடு 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி அதிக (6) கோப்பைகளை வென்ற ஜாம்பவான் வீரராக ஃபைனலில் கோப்பையை வாங்கி தோனியின் பாராட்டுகளுடன் விடைபெற்றார்.

rayudu

இருப்பினும் ஆரம்ப காலத்தில் ஹைதராபாத் மாநில வாரிய நிர்வாகிகள் மற்றும் இந்திய தேர்வுக்குழுவினருடன் ஏற்பட்ட மோதலே தமது கேரியர் பாழாவதற்கு காரணம் என்று சமீபத்தில் தெரிவித்த ராயுடு தமது இடத்தில் ஆல் ரவுண்டரான விஜய் சங்கருக்கு பதில் ரகானே போன்றவர் விளையாடியிருந்தால் கூட ஆதங்கப்பட்டிருக்க மாட்டேன் என்று கூறினார்.

- Advertisement -

இந்நிலையில் அப்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் எஞ்சிய 3 தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து தான் அந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கும் எம்எஸ்கே பிரசாத் பழி வாங்கும் நோக்கத்தில் ராயுடுவை கழற்றி விடவில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாம் அனைவரும் இந்திய தேர்வு குழுவில் 5 உறுப்பினர்கள் மற்றும் கேப்டன் ஆகியோர் தான் உட்கார்ந்து விவாதித்து அணியை தேர்வு செய்வோம் என்பதை அறிவோம். அந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட வீரரின் விஷயத்தில் தனிநபர் முடிவெடுக்க முடியுமா? அப்படி ஒரு நபர் மட்டும் முடிவை எடுக்க முடிந்தால் 5 தேர்வாளர்கள் தேவையில்லை”

Prasad

“எனவே ஒட்டுமொத்த தேர்வுக்குழுவின் ஒருமித்த கருத்தின் படியே எந்த ஒரு முடிவும் எடுக்கப்படுகிறது. மாறாக தனிநபரின் விருப்பப்படி முடிவெடுக்கப்படுவதில்லை. நான் ஒரு கருத்தை சொன்னாலும் மற்றவர்கள் அதை எதிர்க்கும் போது எதுவும் செய்ய முடியாது. பொதுவாக ஒரு அணியில் எடுக்கும் சிறிய முடிவு கூட நீண்ட காலத்திற்கு பயனை கொடுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் எப்போதும் ஒரு அண்ணன் தம்பிக்குள்ளேயே வெவ்வேறான கருத்துக்கள் இருக்கும். ஆனால் இந்திய அணியின் தேர்வு போன்ற பெரிய மேடைக்கு அங்கு இங்கும் சிறிய வேறுபாடுகளை கொண்டு செல்வதற்கு அது காரணமாக இருக்க முடியாது”

இதையும் படிங்க:ரிட்டையரான அப்றம் என்னோட கேரியரில் அந்த முடிவை எடுத்ததுக்கு வருந்துவேன் – அஸ்வின் ஆதங்கம், காரணம் என்ன

“மேலும் உலகக் கோப்பைக்கு முந்தைய போட்டிகளுக்கும் ராயுடு இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டார். அந்த போட்டிகளில் வேறுபாடு இல்லாமல் தேர்வு செய்த உங்களை உலக கோப்பையில் மட்டும் எப்படி வித்தியாசப்படுத்துவோம்? எனவே ஒரு வீரரின் தேர்வு என்பது கூட்டாக தேர்ந்தெடுக்கப்படும் முடிவு என்பதையும் தனிப்பட்ட நபரின் முடிவாக இருக்காது என்பதையும் தெளிவுப்படுத்தி கொள்ள விரும்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement