ரிட்டையரான அப்றம் என்னோட கேரியரில் அந்த முடிவை எடுத்ததுக்கு வருந்துவேன் – அஸ்வின் ஆதங்கம், காரணம் என்ன

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் 10 வருடங்களாக தொடர்ந்து ஐசிசி தொடர்களில் தோற்று வெறும் கையுடன் நாடு திரும்பியது. இந்த தோல்விக்கு டாஸ் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்தாதது கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் அரை சதம் கூட டிக்காமல் சொதப்பியது போன்றவை முக்கிய காரணமாக அமைந்தது.

Paras-and-Ashwin

- Advertisement -

அதை விட தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்ந்தெடுக்காமல் கழற்றி விட்டது தோல்விக்கு முதன்மை காரணமானது. ஏனெனில் உலகிலேயே அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் செய்த பவுலராக ஏற்கனவே உலக சாதனை படைத்துள்ள அவர் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் உள்ள 5 இடது கை பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்திருப்பார். அதிலும் குறிப்பாக அஸ்வின் இருந்திருந்தால் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 163 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்திருக்க மாட்டார் என்றே சொல்லலாம்.

அஸ்வின் ஆதங்கம்:
இருப்பினும் கடந்த ஃபைனலில் மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலையில் 2 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்ததால் தோல்வி கிடைத்ததை கணக்கில் கொண்ட ரோகித் சர்மா இங்கிலாந்தின் இதர மைதானங்களை காட்டிலும் ஓவல் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று சச்சின் போன்ற ஜாம்பவான்கள் கொடுத்த ஆலோசனையை கேட்காமல் தப்பு கணக்கு போட்டு அதற்கான பரிசையும் பெற்றார். மேலும் உலகின் நம்பர் ஒன் பவுலரை ஃபைனலில் கூல்ட்ரிங்ஸ் தூக்க வைத்த பெருமையை கொண்ட இந்திய அணியினர் இதுவே நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தால் அஷ்வினை கழற்றி விட்டிருப்பார்களா என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்தார்.

Gavaskar-and-Ashwin

முன்னதாக ஆரம்ப காலங்களில் ஆசிய கண்டத்தில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அசத்திய அஸ்வின் வெளிநாடுகளில் தடுமாறினார். அதனால் அவரை விராட் கோலி – ரவி சாஸ்திரி ஆகியோரை கொண்ட முந்தைய கூட்டணி வெளிநாடுகளில் கழற்றி விட்டு வந்தது. இருப்பினும் அனுபவத்தால் முன்னேறிய அஸ்வின் சமீப காலங்களில் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தி 2019 – 2021, 2021 – 2023 ஆகிய அடுத்தடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த பவுலராக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஓய்வுக்கு பின் ஏன் பவுலராக விளையாட முடிவெடுத்தோம் என்பதை நினைத்து வருந்தப் போவதாக அஸ்வின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது இதே இந்திய அணியில் விராட் கோலி முதல் புஜாரா வரை 2019க்குப்பின் 2 – 3 வருடங்கள் சதமடிக்காமல் சொதப்பிய போதும் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பவுலர்கள் மட்டும் கணிசமான போட்டிகளில் தடுமாறினாலும் தொடர் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Ashwin

“நாளை நான் ஓய்வு பெறும் போது ஒரு நல்ல பேட்ஸ்மேனாக இருந்தும் நாம் பவுலராக வந்திருக்கக் கூடாது என்பதை நினைத்து வருந்துவேன். இந்த கலாச்சாரத்திற்கு எதிராக நான் தொடர்ந்து சில போராட்டங்களை நடத்தியுள்ளேன். ஆனால் எப்போதுமே பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் ஆகிய இருவருக்கும் வெவ்வேறு நியாயங்கள் உள்ளன. அவர்கள் இங்கே வெவ்வேறு மாதிரியாக நடத்தப்படுகிறார்கள். மேலும் பேட்ஸ்மேன்களுக்கு இது ஒரு பந்து போட்டி என்பதையும் அவர்களுக்கு வாய்ப்பு தேவைப்படும் என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்”

- Advertisement -

“முன்னதாக ஒரு டெஸ்ட் போட்டியில் 40 ஓவர்களும் பவுலர் தடுமாறுகிறார் என்று ஒரு ஜாம்பவான் விமர்சித்தார். ஆனால் என்னுடைய வாதம் என்னவெனில் பேட்ஸ்மேன்கள் போட்டியிலும் வலைப்பயிற்சியிலும் தடுமாறும் போது பேட்ஸ்மேன்களுக்கான தேவையில் மாற்றம் ஏற்படுவதில்லை. இங்கே நான் பேட்ஸ்மேன் விளையாட கூடாது என்று சொல்லவில்லை. மாறாக பவுலருக்கு நிகரான வாய்ப்புகளை பெற்று விளையாட வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறினார்.

Ashwin

இதையும் படிங்க: IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் – புதிய கேப்டன் இவர்தான்

அந்த வகையில் ஆரம்பத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மனாக விளையாட துவங்கிய அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்து ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் 2வது இடத்தில் ஜொலிக்கிறார். ஒருவேளை பேட்ஸ்மேனாக வந்திருந்தால் அவர் இந்திய அணியில் இன்னும் அதிகமாக மதிக்கப்பட்டிருக்கலாம்.

Advertisement