IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் – புதிய கேப்டன் இவர்தான்

IND
- Advertisement -

லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணியானது தற்போது நாடு திரும்பியுள்ள வேளையில் அடுத்ததாக ஒரு மாதம் இந்திய அணியின் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த மாதம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

INDvsWI

- Advertisement -

அப்படி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட 20 டி20 தொடர் என ஒரு பெரிய தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் அணியில் மட்டுமே ரோகித் சர்மா தலைமையிலான சீனியர் அணி விளையாடும் என்றும் அதற்கு அடுத்து வரும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணிகளில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.

Hardik-Pandya

அந்த வகையில் ரோகித் சர்மா டெஸ்ட் தொடரோடு வெளியேறும் வேளையில் ஒருநாள் மற்றும் டி20 அணியை முன்னணி ஆல் ரவுண்டான ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் சமீப காலமாகவே ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் மீது விமர்சனங்கள் எழுந்து வரும் வேளையில் அடுத்ததாக எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் முழுநேர கேப்டனாக செயல்பட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அசத்தலான கேப்டன்சியை வெளிப்படுத்தி வரும் பாண்டியா எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக பார்க்கப்படுகிறார்.

இதையும் படிங்க : இந்திய அணியின் வீரர்களிடம் உள்ள அந்த திமிர் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தோக்க காரணம் – ஆன்டி ராபர்ட்ஸ் காட்டம்

இவ்வேளையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் முழுவதும் அவர் வைட்பால் கிரிக்கெட்டுக்கு கேப்டன்சி செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது. அடுத்து நிச்சயம் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டாலும் அதற்கு அடுத்து முழுநேர கேப்டனாக ஹார்திக் பாண்டியாவே நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

Advertisement