இந்திய அணியின் வீரர்களிடம் உள்ள அந்த திமிர் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தோக்க காரணம் – ஆன்டி ராபர்ட்ஸ் காட்டம்

Andy-Roberts
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய அணி கோப்பையை தவற விட்டுள்ளது.

Rohit

- Advertisement -

இந்திய அணி பெற்ற தோல்வி அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இங்கிலாந்து பயணித்த இந்திய அணி ரோகித் சர்மாவின் தவறான அணித்தேர்வு மற்றும் தவறான அணுகுமுறை காரணமாகவே தோல்வியை சந்தித்தது என பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூட : இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களுக்கும், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இடையே நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த அணியே போட்டியை கைப்பற்றும் என கூறியிருந்தார். அந்த வகையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ஆஸ்திரேலிய அணி அசத்தலான வெற்றி பெற்றது.

Micthell Starc

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க இந்திய அணிக்குள் புகுந்த ஆணவம் தான் காரணம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளரான ஆண்ட்டி ராபர்ட் காட்டமாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணிக்குள் எந்த அணியையும் வீழ்த்தி விடலாம் என்ற ஆணவம் தற்போது ஊடுருவியுள்ளது. அவர்கள் மற்ற அணியை குறைத்து மதிப்பிடுகின்றனர். அவர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் முக்கியமா? அல்லது குறுகிய ஓவர் போட்டிகள் முக்கியமா? என்ற முடிவினை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : வெளிநாட்டில் அசத்தியும் யூஸ் பண்ணிட்டு கழற்றி விட்டாங்க, ஃபைனல் பற்றி அஸ்வின் – ஆதங்கத்துடன் பேசியது என்ன?

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் பெரிதாக எதையும் யோசிக்க வேண்டாம். ஆனால் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை பல்வேறு விடயங்களை யோசிக்க வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த இறுதி போட்டியில் மோசமான ஷாட்களை விளையாடினார்கள். டெஸ்ட் வடிவத்திற்கு ஏற்றவாறு அவர்கள் விளையாடவில்லை எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement