வெளிநாட்டில் அசத்தியும் யூஸ் பண்ணிட்டு கழற்றி விட்டாங்க, ஃபைனல் பற்றி அஸ்வின் – ஆதங்கத்துடன் பேசியது என்ன?

ashwin
- Advertisement -

இங்கிலாந்தில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்து வெறும் கையுடன் நாடு திரும்பியது. இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் ஆரம்பத்திலேயே கிடைத்த டாஸ் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்த தவறிய இந்தியா ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு முழுமையாக தயாராகாமல் ஃபைனலில் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியது தோல்வியை கொடுத்தது.

Ashwin

- Advertisement -

அத்துடன் ஜாம்பவான்களாக போற்றப்படும் கேப்டன், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா உள்ளிட்டோர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பியது தோல்விக்கு காரணமானது. அதை விட தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை சுழலுக்கு சாதகமான ஓவல் மைதானத்தில் சச்சின் போன்ற ஜாம்பவான்கள் கேட்டுக் கொண்டும் தேர்வு செய்யாதது தோல்விக்கு நேரடி காரணமாக அமைந்தது. குறிப்பாக கடந்த ஃபைனலில் மேகமூட்டத்துடன் கூடிய வானிலையில் 2 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்தது தோல்வியை கொடுத்ததால் ஜடேஜாவை மட்டும் தேர்வு செய்த இந்தியா அஸ்வினை கழற்றி விட்டது.

யூஸ் பண்ணிக்கிட்டாங்க:
ஆனால் ஏற்கனவே அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய பவுலராக உலக சாதனை படைத்துள்ள அஸ்வினை ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடது கை வீரர்கள் இருந்தும் தேர்வு செய்யாமல் இந்தியா தவறு செய்ததாக ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக், சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் விமர்சித்தனர். அந்த வகையில் அவர் விளையாடியிருந்தால் 163 ரன்கள் எடுத்த டிராவிஸ் ஹெட் வெற்றியை பறித்திருக்க மாட்டார் என்று ரசிகர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Ashwin

இந்நிலையில் கடந்த ஃபைனலில் 4 விக்கெட்டுகளை எடுத்து சமீப காலங்களில் வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டு 2019 – 2021, 2021 – 2023 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக சாதனை படைத்து அடுத்தடுத்த ஃபைனலுக்கு தகுதி பெற உதவிய தாம் அந்த போட்டியில் விளையாட விரும்பியதாக அஸ்வின் கூறியுள்ளார். ஆனாலும் ஃபைனலுக்கு செல்ல தம்மை பயன்படுத்திய இந்திய அணி நிர்வாகம் அதில் விளையாடி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு கொடுக்கவில்லை என ஆதங்கப்படும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது பதிலளிப்பதற்கு கடினமான கேள்வி அல்லவா? ஏனெனில் நாம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு பின் நிற்கிறோம். அப்போட்டியில் நான் விளையாட விரும்பினேன். ஏனெனில் நான் இந்தியா அப்போட்டிக்கு தகுதி பெறுவதில் முக்கிய பங்காற்றினேன். சொல்லப்போனால் கடந்த ஃபைனலில் கூட நான் 4 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டேன். மேலும் 2018/19 முதலே வெளிநாட்டுப் போட்டிகளில் என்னுடைய பவுலிங் சிறப்பாக முன்னேறி அணிக்காக வெற்றியை பெற்றுக் கொடுத்து வருகிறேன். இருப்பினும் நான் கேப்டன் அல்லது பயிற்சியாளர்கள் இடத்தில் இருந்து பேச வேண்டியுள்ளது”

 

- Advertisement -

Ashwin

“குறிப்பாக கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 2 – 2 என்ற கணக்கில் தொடரை நாம் சமன் செய்த உதவிய 4 வேகம் 1 சுழல் கூட்டணியுடன் ஃபைனலில் களமிறங்கலாம் என்று அவர்கள் உணர்ந்திருப்பார்கள். ஆனால் பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸில் தான் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் 4வது இன்னிங்க்ஸில் பெரிய ரன்களை எடுக்க முடியும் என்று கருதுபவர்கள் ஸ்பின்னர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று நினைக்கின்றனர். எனவே இது மனநிலைமையை அடிப்படையாக கொண்ட விஷயமாகும்”

“தற்போது 36 வயதாகும் எனக்கு எது தூண்டுகிறது எது மாறுகிறது என்பனவற்றில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு முறையும் முன்னாள் வீரர்களிடமிருந்து வாழ்த்து குறுஞ்செய்திகள் வரும் போது நான் உற்சாகமாக பதிலளிக்கிறேன். நான் அவர்களை சிறு வயதில் பார்த்து வளர்ந்தேன். இருப்பினும் இப்போட்டியில் விளையாடி உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை”

ashwin

இதையும் படிங்க:மீண்டும் சூப்பர் கிங்ஸ் அணியில் எல்லோ ஜெர்சியுடன் விளையாட இருக்கும் அம்பத்தி ராயுடு – சூப்பர் 7 வீரர்கள் லிஸ்ட் இதோ

“அப்போட்டிக்கு 48 மணி நேரங்கள் முன்பாகவே நான் கழற்றி விடப்பட போகிறேன் என்பதை தெரிந்து கொண்டேன். அதனால் இதர வீரர்களுக்கு உதவி (கூல் ட்ரிங்ஸ் தூக்கி) செய்து நமது அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement