கொரோனாவில் இருந்து மீண்ட ரோஹித் சர்மா. மீண்டும் எப்போது அணிக்கு திரும்புகிறார் தெரியுமா? – வெளியான நற்செய்தி

Rohit-Sharma
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனாக கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விராட் கோலி தற்போது மூன்று வகையான கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறியுள்ளதால் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்க்கும் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மாவிற்கு அடிக்கடி ஏற்படும் காயம் ஒரு பெரிய பின்னடைவை தந்து வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது ரோகித் சர்மா டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

Rohith

- Advertisement -

அப்படி அவரது தலைமையிலான இந்திய அணி கடந்த மாதம் இறுதியில் இங்கிலாந்து வந்தடைந்து கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் கலந்து கொண்டு விளையாடியது. அதன்படி கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற பயிற்சி போட்டியின் முதல் நாளில் பங்கேற்று விளையாடிய இந்திய அணியின் கேப்டனும், துவக்க வீரருமான ரோகித் சர்மா அன்றைய நாள் ஆட்டம் முடிந்த பின்னர் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியை அவர் கொரோனா பாதிப்பு காரணமாக தவறவிட்டார். இதன் காரணமாக புதிய கேப்டனாக தற்போது வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோகித் சர்மாவின் நிலை என்ன என்பது பலரது கேள்வியாக இருந்தது.

Rohith

அந்த வகையில் கடந்த பல நாட்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த ரோகித் சர்மா தற்போது சிகிச்சையின் முடிவில் பூரண குணமடைந்து கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து வெளியேறிவிட்டார் என்று தகவல்கள் வெளியாக்கியுள்ளது. மேலும் இந்த கொரோனா சிகிச்சைக்கு பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தற்போது நெகட்டிவ் ரிசல்ட் முடிவு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதன்காரணமாக அவர் முற்றிலுமாக கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து இந்த சிக்கலில் இருந்து வெளியேறியுள்ளார். எனவே இன்னும் இரண்டு நாட்கள் கழித்து துவங்க உள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக பங்கேற்பார் என்று நம்ப தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : இனிமே இப்படி பண்ணா டீம் ஸ்கோர்ல இருந்து 5 ரன்னை பெனால்டியா குறைச்சிடுவோம் – புஜாராவை எச்சரித்த அம்பயர்

மேலும் டி20 தொடருக்கு முன்னர் தற்போது மூன்று நாட்கள் எஞ்சியுள்ளதால் நிச்சயம் இதில் அவர் சரியான பயிற்சியை பெற்று மீண்டும் டி20 போட்டியில் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து வருத்தத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது மீண்டும் அவர் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப இருக்கும் இச்செய்தி வெளியானதால் மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement