இனிமே இப்படி பண்ணா டீம் ஸ்கோர்ல இருந்து 5 ரன்னை பெனால்டியா குறைச்சிடுவோம் – புஜாராவை எச்சரித்த அம்பயர்

Pujara-and-Umpire
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் எஞ்சிய ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது பர்மிங்காம் நகரில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி துவங்கியது. இவ்விரு அணிகளுக்குமே தற்போது புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி துவங்கிய இந்த ஆட்டம் தற்போது மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள வேளையில் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது.

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. அதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ மட்டும் ஒருபுறம் தாக்குப் பிடித்து சதம் அடிக்க மற்ற யாரும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்காததால் இங்கிலாந்து அணியால் முதலில் இன்னிங்சில் 284 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

அதனை அடுத்து நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது 45 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது இங்கிலாந்து அணியை விட இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 257 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணியின் வீரர்களான புஜாரா 50 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

Pujara

இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் மேலும் இவர்கள் இருவரும் ரன்களை குவிக்கும் பட்சத்தில் இந்திய அணி 400 ரன்கள் வரை தொட்டால் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய வீரர் புஜாராவை அம்பயர் எச்சரித்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் புஜாராவை எச்சரித்தது மட்டுமின்றி 5 ரன்கள் பெனாலிட்டியாகவும் கொடுக்கப்படும் என்று அம்பயர்கள் கூறிய விடயம் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி நேற்றைய போட்டியின் 44 வது ஓவரின் முதல் பந்தை வீசிய ஆண்டர்சன் பந்துவீச்சை எதிர்த்து விளையாடிய புஜாரா பந்தை அடித்து விட்டு மைதானத்தின் நடுப்பகுதியில் ரன் ஓட முயன்றார். சர்வதேச கிரிக்கெட்டில் இது போன்று மைதானத்தின் நடுப்பகுதியில் ஓடுவது தவறான ஒன்று. ஏனெனில் அது மைதானத்தை சேதப்படுத்தும் ஒரு நடைமுறையாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : களத்திலேயே ஆக்ரோஷமாக வாய்தகராறில் ஈடுபட்ட விராட்கோலி பேர்ஸ்டோ – நடந்தது என்ன? அவரே கொடுத்த விளக்கம்

எனவே புஜாராவை மைதானத்தில் நடுவில் ஓடி வரக்கூடாது என அம்பயர்கள் எச்சரித்து அனுப்பினர். மேலும் முதல் முறையாக நீங்கள் இந்த தவறை செய்து உள்ளீர்கள் இதை தொடர்ந்து இதேபோன்று இருமுறை செய்தால் உங்கள் அணியில் இருந்து ஐந்து ரன்கள் பெனால்ட்டியாக கழிக்கப்படும் என்றும் புஜாராவுக்கு அம்பயர்கள் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement