களத்திலேயே ஆக்ரோஷமாக வாய்தகராறில் ஈடுபட்ட விராட்கோலி பேர்ஸ்டோ – நடந்தது என்ன? அவரே கொடுத்த விளக்கம்

Bairstow-and-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது பந்து வீச்சினை தீர்மானம் செய்ய முதலில் பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணியானது ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சதத்தினாலும், பும்ராவின் அதிரடி காரணமாகவும் முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியானது நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேரத்தில் 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Johny Bairstow

- Advertisement -

இதன் காரணமாக தற்போது தங்களது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக இந்த இரண்டாவது இன்னிங்ஸில் 257 ரன்கள் முன்னிலை பெற்று தற்போது வலுவான நிலையில் உள்ளது. இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் தற்போது பிரகாசமாகியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான பேர்ஸ்டோ ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறு பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது. ஏனெனில் நேற்றைய போட்டியின் போது முகமது ஷமி பந்து வீசுகையில் அவர் பேர்ஸ்டோவிடம் ஏதோ பேச அதற்கு அவரும் பதிலுக்கு ஆவேசமாக சில விஷயங்களை வார்த்தைகளாக உதிர்த்தார்.

Virat Kohli Jonny Bairstow

இதனைக் கண்டு கோபமடைந்த கோலியும் அவருக்கு எதிராக பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்ரோஷமாக பேசிவிட்டு பந்தை தவிர மற்ற எல்லாம் தெரிகிறது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து உங்கள் வேலையை பாருங்கள் என கோலியிடம் பேர்ஸ்டா ஆவேசமாக கூறிவிட்டு சென்றார். அவர்களுக்கு இடையேயான இந்த மோதல் மைதானத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

அப்போது களத்தில் இருந்த நடுவர்கள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து விராட் கோலி உடனான மோதல் குறித்து பேசியிருந்த பேர்ஸ்டோ கூறுகையில் : நானும் கோலியும் 11 வருடங்களாக ஒருவரை ஒருவர் எதிர்த்து தங்களது அணிகளுக்காக விளையாடி வருகிறோம்.

இதையும் படிங்க : அறிமுக ஒருநாள் போட்டியில் கோல்டன் டக் அவுட்டானாலும் அதிக ரன்கள் குவித்த – டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

களத்தில் எங்களுக்கு பிடித்ததை நாங்கள் செய்கிறோம். அதனால் தான் எங்களுடைய பெஸ்ட்டை வெளிப்படுத்த முடிகிறது. எங்கள் இருவருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சனை எதுவும் கிடையாது. இது களத்தில் எழுந்த ஆக்ரோஷம் மட்டுமே என்று பேர்ஸ்டோ கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement