அறிமுக ஒருநாள் போட்டியில் கோல்டன் டக் அவுட்டானாலும் அதிக ரன்கள் குவித்த – டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

Raina
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற மாபெரும் லட்சியத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் ரன்கள் மேல் ரன்கள் அடித்து தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்ந்தாலும் பெரும்பாலான தருணங்களில் அவ்வளவு சுலபமாக வாய்ப்பு தரமாட்டார்கள். அதற்காக மனம் தளராமல் தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்து தொடர்ச்சியாக கதவை தட்டினால் மட்டுமே வேறுவழியின்றி தேசத்துக்காக விளையாடும் வாய்ப்பை தேர்வுக்குழுவினர் கொடுப்பார்கள்.

sachin

- Advertisement -

அதுவே ஒரு வீரரின் மிகப்பெரிய வெற்றி என்றாலும் ஏற்கனவே அணியில் சீனியர் வீரர்கள், சிறப்பாக செயல்பட்டு தங்களுக்கென்று நிலையான இடத்தை பிடித்த வீரர்கள் இருப்பதால் முதல் முறையாக தேர்வாகும் இளம் வீரருக்கு விளையாடும் 11 பேர் அணியில் நேரடியாக களமிறக்கும் வாய்ப்பு கிடைப்பது அதைவிட கடினமாகும். ஒரு சில வீரர்களுக்கு அது உடனடியாகவும் ஒரு சிலருக்கு நீண்ட நாட்கள் பெஞ்சில் அமர்ந்திருந்த பின்பும் கிடைக்கும்.

இருப்பினும் வாய்ப்பு என்பது எப்போது கிடைத்தாலும் முதல் முறையாக நாட்டுக்காக தனது முதல் போட்டியில் நாட்டின் முத்திரை பதித்த அந்த தொப்பியை உணர்ச்சிப்பூர்வத்துடன் பெற்று களமிறங்கும் வீரர்கள் முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனெனில் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தால் மொத்தக் கேரியரும் அட்டகாசமாக இருக்கும். அதனால் எப்படியாவது அனைவரையும் ஈர்க்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கும் அத்தனை அறிமுக வீரர்களாலும் முதல் போட்டியிலேயே அரை சதம் அல்லது சதமடித்து அசத்த முடிவதில்லை.

kohli

ஹீரோ டூ ஜீரோ:
ஏனெனில் உள்ளூர் போட்டிக்கும் சர்வதேச போட்டிக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும் என்பதால் அந்த பதற்றமும் அழுத்தமும் அறிமுக வீரரை நிச்சயமாக தடுமாறச் செய்யும். அதில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் டக் அவுட் போன்ற சொதப்பல்களை செய்து அவுட்டானால் அது அந்த அறிமுக வீரரின் மொத்த கனவையும் சிதைத்தது போல் ஆகிவிடும். அதிலும் அறிமுக போட்டியிலேயே கோல்டன் டக்-அவுட்டானால் அந்த வீரரின் மனது சுக்குநூறாக உடைந்துவிடும். ஏனென்றால் அதற்கு பின் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாது. அதைவிட முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் அமைந்து ஆரம்பத்திலேயே அவருக்கு மனதளவில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

- Advertisement -

ஆனால் வீரனுக்கு தோல்வி தான் வெற்றிக்கான முதல்படி என்ற வகையில் மனம் தளராமல் அடுத்து கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அபாரமாக செயல்பட்டு வீழாமல் எழுந்து நின்று சரித்திரம் படைத்த வீரர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அந்தவகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே கோல்டன் டக் அவுட்டாகி பின்னர் அதிக ரன்கள் குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்.

White

5. கேமரூன் வைட் 2072: 2010 வாக்கில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த இவர் கடந்த 2005ல் நியூசிலாந்துக்கு முதல் முறையாக அறிமுகமாக களமிறங்கிய போட்டியில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா தடுமாறிய போது முதல் முறையாக களமிறங்கினார்.

- Advertisement -

ஆனால் துரதிஸ்டவசமாக முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டான அவர் அதன்பின் 91 போட்டிகளில் 2 சதங்கள் உட்பட 2072 ரன்களை 33.96 என்ற நல்ல சராசரியில் எடுத்து மோசம் என்று சொல்லும் அளவுக்கு செயல்படாமல் சிறப்பாகவே செயல்பட்டார்.

Roy

4. ஜேசன் ராய் 3833: கடந்த 2015இல் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அறிமுகமாக களமிறங்கிய இவர் அலெஸ் ஹெல்ஸ் உடன் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

ஆனால் நட்சத்திரம் டிரென்ட் போல்ட் வீசிய அதிரடி பதில் கோல்டன் டக் அவுட்டான அவர் தற்போது 101 ஒருநாள் போட்டிகளில் 10 சதங்கள் உட்பட 3833* ரன்களை 41.22 என்ற நல்ல சராசரியில் எடுத்து இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர அதிரடி தொடக்க வீரராக வலம் வருகிறார்.

sureshraina

3. சுரேஷ் ரெய்னா 5615: 2005 – 2015 வரை இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அற்புதமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இவர் உலகின் நம்பர் 1 பீல்டராகவும் வலம் வந்தார். கடந்த 2005இல் இலங்கைக்கு எதிராக தனது அறிமுக ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அவரை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கோல்டன் டக் அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பி வைத்தார்.

இருப்பினும் அதற்காக மனம் தளராமல் அடுத்து வந்த போட்டிகளில் அதிரடியாகவும் அபாரமாக பேட்டிங் செய்த அவர் 226 போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 5615 ரன்களை 35.51 என நல்ல சராசரியில் குவித்து ஒரு வெற்றிகரமான பேட்ஸ்மேனாகவே ஓய்வு பெற்றார். குறிப்பாக 2011 உலக கோப்பையில் காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் இவர் அடித்த கணிசமான ரன்கள் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது.

malik

2. சோயப் மாலிக் 7534: கடந்த 1999இல் ஷார்ஜாவில் நடந்த கொக்ககோலா கோப்பையில் அறிமுகமான இவரை இலங்கையின் சனத் ஜெயசூரியா தனது மாயாஜால சுழலில் கோல்டன் டக் அவுட் செய்தார். ஆனாலும் அதன்பின் 287 போட்டிகளில் 9 சதங்கள் உட்பட 7534 ரன்களை 34.55 என்ற நல்ல சராசரியில் எடுத்து மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக பாகிஸ்தானுக்கு நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்தார்.

1. எம்எஸ் தோனி 10773: இந்த பதிவுக்கு வைக்கப்பட்ட தலைப்பு இவருக்குத்தான் என்பதுபோல் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி தேர்வு குழுவினரின் கதவை தட்டி கடந்த 2004இல் ஜாம்பவான் கேப்டன் கங்குலியின் நம்பிக்கையை பெற்று வங்கதேசத்துக்கு எதிரான அறிமுகப் போட்டியில் களமிறங்கிய இவர் முதல் போட்டியிலேயே பதற்றமடைந்து துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

Dhoni

அதன் பின்பும் ஒரு சில போட்டிகளில் சொதப்பிய அவர் ஒரு வழியாக விசாகப்பட்டினத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிரட்டலான சதமடித்தார். அதன்பின் 3 வகையான இந்திய அணியிலும் தனது அபார பேட்டிங் திறமையால் அவர் பெற்றுக்கொடுத்த வெற்றிகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கேப்டனாகவும் 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த அவர் ஜீரோவில் துவங்கினாலும் இந்தியாவின் ஹீரோவாக 350 ஒருநாள் போட்டிகளில் 10 சதங்கள் உட்பட 10773 ரன்களை 50.57 என்ற அபாரமான சராசரியில் குவித்து மகத்தான பேட்ஸ்மேனாக ஓய்வு பெற்றார்.

Advertisement