தோனியை விட இவர்தான் கூலானவர்! ரொம்ப கூலா கேப்டன்சி பண்றாரு – இர்பான் பதான் பாராட்டு

pathan 1
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா மீண்டும் ஒரு வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றது. முன்னதாக கடந்த மார்ச் 4-ஆம் தேதி மொஹாலியில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது.

IND

- Advertisement -

அதை தொடர்ந்து கடந்த மார்ச் 12-ஆம் தேதியன்று பெங்களூருவில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் அமர்க்களமாக விளையாடிய இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் இமாலய வெற்றி பெற்றது. மறுபுறம் டி20 தொடரில் 3 – 0 என வைட்வாஷ் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரிலும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாத இலங்கை அடுத்தடுத்த ஒயிட்வாஷ் தோல்விகளை பெற்று மிகுந்த ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது.

மிரட்டும் புதிய கேப்டன் ரோஹித்:
முன்னதாக இந்த இலங்கை டெஸ்ட் தொடரில் புதிய முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது புதிய பயணத்தைத் தொடங்கிய இந்தியா வெற்றிநடை போட துவங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக முழு நேர டி20 கேப்டனாக பொறுப்பேற்ற அவரிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் கேப்டன் பதவியும் ஒப்படைக்கப்பட்டது.

rohith

அதன்பின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்த விராட் கோலி திடீரென்று பதவி விலகியதை அடுத்து 3 வகையான இந்திய கிரிக்கெட் அணிக்கும் புதிய கேப்டனாக ரோகித் சர்மா செயல்படத் துவங்கி உள்ளார். அவர் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற நவம்பர் முதல் இப்போது வரை நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர், இலங்கைக்கு எதிராக டி20 மற்றும் டெஸ்ட் தொடர் என மொத்தம் 5 தொடர்களில் இந்தியா பங்கேற்றது. அந்த 5 தொடர்களிலும் அபாரமாக கேப்டன்ஷிப் செய்த ரோகித் சர்மா ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் 14 க்கு 14 போட்டிகளில் வெற்றியை பெற்றுக்கொடுத்து 5 வைட்வாஷ் வெற்றிகளுடன் கூடிய 5 கோப்பைகளை வாங்கிக்கொடுத்துள்ளார்.

- Advertisement -

தோனியை விட கூலானவர்:
மொத்தத்தில் சொந்த மண்ணில் இதுவரை 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக கேப்டன்ஷிப் செய்து வரும் ரோகித் சர்மா தனது பொறுப்பில் அமர்க்களப்படுத்தி வருகிறார் என்றே கூறலாம். பொதுவாக பார்ப்பதற்கு களத்தில் கூலாக காட்சியளிக்கும் அவர் ஒரு கேப்டனாக முக்கிய முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். இந்நிலையில் கூலான கேப்டன்ஷிப்க்கு பெயர் போன முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை விட ரோகித் சர்மா மிகவும் கூலாக கேப்டன்ஷிப் செய்வதாக முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

irfan-pathan

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 2011 உலகக்கோப்பைக்கு இடம் கிடைக்காமல் தவித்த நாளுக்குப்பின் ரோகித்சர்மா மிகவும் மாறிவிட்டார். அந்த சமயங்களில் அவரின் திறமைகளை பற்றி நிறைய பேசினார்கள். அந்த சமயங்களில் தனது கடின உழைப்பால் தன்னை மெருகேற்றி வந்த அவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் ட்ராபியில் மிகச் சிறந்த வாய்ப்பு தேடி வந்தது. அந்த உலக கோப்பையில் ஓப்பனிங்கில் களமிறங்க அவருக்கு கிடைத்த வாய்ப்பு அவரின் வாழ்க்கையையே உச்ச கட்டத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.

- Advertisement -

அதன் பின் அவர் தனது தொடர்ச்சியான செயல்பாடுகளில் முன்னேற்றத்தை கொண்டு வந்தார். மேலும் எப்போதுமே நாம் கூலாக இருக்கும் எம்எஸ் தோனியை பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் எம்எஸ் தோனியை விட ரோகித் சர்மா ஒரு வெள்ளரி காயை போல மிகவும் கூலானவர்” என பாராட்டினார்.

இமயம் தொட்டுள்ள ஹிட்மேன்:
அவர் கூறுவது போல ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த ரோகித் சர்மா ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி வந்தார். அந்த நிலைமையில் இங்கிலாந்தில் நடந்த 2013 சாம்பியன்ஸ் டிராபியின் போது அவரின் திறமையை உணர்ந்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி அவரை முதல் முறையாக தொடக்க வீரராக களமிறக்கினார். அதை கச்சிதமாக பயன்படுத்திய ரோகித் சர்மா அதன்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் உட்பட பல அளப்பரிய சாதனைகளை படைத்து இன்று இந்திய அணியில் ஒரு தவிர்க்க முடியாத ஒருவராக உருவெடுத்துள்ளார்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற அவர் அதன்பின் 5 கோப்பைகளை வென்று கொடுத்து இன்று 3 வகையான இந்திய அணிக்கு கேப்டனாகும் அளவிற்கு இமயத்தை தொட்டுள்ளார். இதுபற்றி இர்பான் பதான் மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் இப்படி மாருவார்ன்னு நான் எதிர்ப்பார்க்கல – வெளிப்படையாக பாராட்டிய கேப்டன் ரோஹித் சர்மா

“அவர் ஒரு ஐபிஎல் தொடரின் பாதியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். குறிப்பாக ரிக்கி பாண்டிங்க்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்ற அவர் அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணியை முழுமையாக மாற்றிவிட்டார். ரோகித் ஷர்மாவிடம் இருந்து ஒரு அணியை எப்படி தனது தோள் மீது சுமந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபடுவது என்பது பற்றி ஒருவர் கற்றுக் கொள்ளலாம்” என கூறினார்.

Advertisement