ரிஷப் பண்ட் இப்படி மாருவார்ன்னு நான் எதிர்ப்பார்க்கல – வெளிப்படையாக பாராட்டிய கேப்டன் ரோஹித் சர்மா

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரு இன்னிங்ஸ்களிலும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல ரன் குவிப்பை வழங்கியது. இறுதியில் 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

INDvsSL cup

- Advertisement -

ஆனால் இலங்கை அணியால் 208 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக 238 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. அது மட்டுமின்றி 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. போட்டியின் ஆட்ட நாயகனாக ஷ்ரேயாஸ் ஐயரும், தொடர் நாயகனாக ரிஷப் பண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் இந்திய அணியின் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டையும் அவர் வெகுவாக பாராட்டி பேசியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Pant

டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டிக்கு போட்டி ரிஷப் பண்டின் திறமையை அவர் சரியாக வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இந்த தொடரில் போட்டிகளின் சூழ்நிலை எவ்வாறு இருந்தாலும் ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஆனால் அந்தத் தொடரிலேயே அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது நம்பிக்கையை வெளிக்காட்டி இருந்தார்.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி தற்போதெல்லாம் நாளுக்குநாள் கேட்ச் பிடிப்பதிலும், ஸ்டம்பிங் செய்வதிலும் கூட அவரது திறமையை அற்புதமாக வெளிக்காட்டி வருகிறார் என்று ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கோடு சேர்த்து அவரின் கீப்பிங் திறனையும் முதல் முறையாக ரோகித் சர்மா பாராட்டியுள்ளது நமக்கே ஆச்சரியமாக அமைந்தது. இந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியின்போது 96 ரன்களை அடித்த ரிஷப் பண்ட், இரண்டாவது போட்டியிலும் 28 பந்துகளில் அரைசதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதையும் படிங்க : டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் நபராக இந்த சாதனையை செய்து வரலாறு படைத்த – அஷ்வின்

அதோடு இந்திய வீரர்களில் யாரும் படைக்காத சாதனையாக டெஸ்ட் தொடரின் தொடர்நாயகன் விருதையும் அவர் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதோடு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் விக்கெட் கீப்பராக இந்திய அணி சார்பாக டாப் 6-ல் முதல் நபராக இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement