சுழலுக்கு சாதகமாக மைதானங்களில் அவர் டான் ப்ராட்மேன் மாதிரி.. சீக்கிரம் அவுட்டாக்குங்க.. இங்கிலாந்தை எச்சரித்த பனேசர்

Monty Panesar
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்காக எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் தொடரை 13 வருடங்கள் கழித்து இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்து அசத்தியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அந்த தொடருக்கு அடுத்தபடியாக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் – ப்ரண்டன் மெக்கல்லம் ஆகியோர் தலைமையில் கடந்த சில வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிய நிறைய வெற்றிகளை குவித்து வரும் இங்கிலாந்து இத்தொடரில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

டான் ப்ராட்மேன் மாதிரி:
இந்நிலையில் இந்தியாவில் உள்ள சுழலுக்கு சாதகமான மைதானங்களில் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் போல அதிரடியாக விளையாடும் திறமையை கொண்டுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் கூறியுள்ளார். எனவே இங்கிலாந்து வெற்றி பெற ரோஹித்தை விரைவாக அவுட் செய்வது அவசியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“சுழலும் பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்வார்கள். அவர்கள் சற்று அதிக பயமின்றி விளையாடுவார்கள். குறிப்பாக இந்திய அணிக்கு ரோகித் சர்மா சாவியாக இருப்பார். சுழலக் கூடிய மைதானங்களில் அவர் டான் பிராட்மேன் போல செயல்படுவார். அவருடைய புள்ளிவிவரங்களும் நம்ப முடியாததாக இருக்கிறது. எனவே இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும்”

- Advertisement -

“ஒருவேளை ரோகித்தை இங்கிலாந்து அமைதியாக வைத்திருந்தாலும் இந்தியா பிளான் பி வைத்து விளையாடுவார்கள். அது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் அவர்களின் இளம் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உண்டாக்க வேண்டும். இது தான் உங்களுடைய வெற்றிக்கான சாவியாக இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: விராட், ரோஹித்தை எடுத்த நீங்க அந்த சீனியர் பிளேயரை ஏன் எடுக்கல.. ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

அவர் கூறுவது போல 2022 பிப்ரவரி மாதம் நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி உட்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் தடுமாறினார்கள். ஆனால் ரோகித் சர்மா மட்டும் அதிரடியாக விளையாடி சதமடித்தது கடைசியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. எனவே இந்த தொடரிலும் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றி நாயகனாக இருப்பார் என்று உறுதியாக சொல்லலாம்.

Advertisement