விராட், ரோஹித்தை எடுத்த நீங்க அந்த சீனியர் பிளேயரை ஏன் எடுக்கல.. ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

Aakash Chopra 3
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேப்டனாக ரோகித் சர்மா விளையாடுவார் என்று அறிவித்துள்ள பிசிசிஐ நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் 14 மாதங்கள் கழித்து இந்த 2 சீனியர்களும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய இந்த சீனியர் ஜோடி அதன் பின் கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தனர். அதனால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி விளையாடும் என்றும் ரோகித் மற்றும் விராட் விளையாடுவது சந்தேகம் என்றும் செய்திகள் வலம் வந்தன.

- Advertisement -

என்ன தப்பு பண்ணாரு:
அந்த நிலைமையில் பாண்டியா காயமடைந்துள்ளதால் தற்போது தேர்வாகியுள்ள ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ரோகித் மற்றும் விராட் ஆகிய 2 சீனியர்களையும் தேர்வு செய்துள்ள தேர்வுக்குழு கே.எல் ராகுலை மட்டும் காரணமின்றி கழற்றி விட்டதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

குறிப்பாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி நடைபெற்று முடித்த தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் நல்ல ஃபார்மில் இருந்தும் ராகுலை தேர்வுக் குழுவினர் கழற்றி விட்டுவதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் நடந்துள்ள குளறுபடியான தேர்வுகள் பற்றி ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சீனியர்களை நீங்கள் மீண்டும் கொண்டு வர விரும்பும் போது கே.எல். ராகுல் மட்டும் என்ன தவறு செய்தார்? ஏனெனில் கடந்த டி20 உலகக் கோப்பையை மையப்படுத்தி நீங்கள் இம்முறை அணியை உருவாக்கினால் ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. அந்த இருவருமே கடந்த உலகக் கோப்பையில் சுமாராக செயல்பட்டு ஒரே கப்பலில் இருந்தார்கள். அதன் பின் 2023 உலகக் கோப்பையில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்”

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்ல லாராவின் 400 ரன்கள் சாதனையை நிச்சயம் இவரால் முறியடிக்க முடியும் – மைக்கல் கிளார்க் கருத்து

“அதனால் நீங்கள் அவர்கள் இருவரையும் தேர்வு செய்திருக்க வேண்டும். தற்போது ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார். இருப்பினும் ரோகித், கோலியை தேர்வு செய்துள்ள நீங்கள் ராகுலை கழற்றி விட்டுள்ளீர்கள். அதே போலவே கடந்த வருடம் வாய்ப்பு பெறாத சஞ்சு சாம்சனுக்கு இப்போது திடீரென நீங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள். அவரும் டி20 கிரிக்கெட்டில் சுமாரான செயல்பாடுகளையே வெளிப்படுத்தியுள்ளார்” என்று கூறினார்.

Advertisement