டெஸ்ட் கிரிக்கெட்ல லாராவின் 400 ரன்கள் சாதனையை நிச்சயம் இவரால் முறியடிக்க முடியும் – மைக்கல் கிளார்க் கருத்து

Clarke-and-Lara
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் ஏற்கனவே அந்த தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஓய்வினை அறிவித்த டேவிட் வார்னர் தொடர்ந்து டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அற்புதமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக அற்புதமான பங்களிப்பை வழங்கி உள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக போட்டியின் எந்த சூழ்நிலையிலும் அதிரடியாக ஆடும் அவரது பேட்டிங் எதிரணியை அழுத்தத்தில் தள்ளி ஆஸ்திரேலியாவுக்கு பலமுறை வெற்றியும் பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் டேவிட் வார்னரின் ஓய்வுக்கு பிறகு எந்த வீரர் துவக்க ஆட்டக்காரராக விளையாடப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் டேவிட் வார்னருக்கு பதிலாக துவக்க வீரராக நான் களமிறங்க தயார் என்று ஸ்டீவ் ஸ்மித் ஏற்கனவே அறிவித்திருந்தாலும் அந்த இடத்தில் இறங்கப்போவது யார்? என்ற கேள்வி அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனோட மைக்கேல் கிளார்க் கூறுகையில் : ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான 12 மாதங்களில் நம்பர் 1 இடத்தை பிடித்த வீரர். அவரிடம் நல்ல டெக்னிக் இருக்கிறது நிச்சயம் அவர் ஆஸ்திரேலிய அணிக்காக துவக்க வீரராக களமிறங்க விருப்பப்படும் பட்சத்தில் அவருக்கு அந்த வாய்ப்பினை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.

இதையும் படிங்க : வருங்காலமே இல்ல.. விராட் ரோஹித் வந்ததால் அந்த 3 இளம் வீரர்களின் சான்ஸ் முடிஞ்ச்சு.. தீப் தாஸ்குப்தா

டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் அவரால் மிகப்பெரிய இன்னிங்சை விளையாட முடியும். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரருக்கான வாய்ப்பினை அவருக்கு வழங்க வேண்டும் என மைக்கல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த முடிவினை எடுக்கும் உரிமை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமும், கேப்டன் பேட் கம்மின்ஸ்ஸிடம் மட்டுமே உள்ளது.

Advertisement