IND vs AUS : கே.எல் ராகுல் பத்தி எதுவுமே பேசாமல் நகர்ந்து சென்ற ரோஹித் சர்மா – டாஸிற்கு பிறகு பேசியது என்ன?

Rohit-and-KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று இந்தூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்யும் என்று கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்ஸ்ஸை விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றியை பெற்றிருந்தாலும் இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுல் பேட்டிங் ஃபார்ம் குறித்த பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

IND vs AUS

- Advertisement -

ஏனெனில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் அவருக்கு வாய்ப்பினை மறுத்து இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்தும் ஆதரவுகள் குவிந்து வந்தது. இந்நிலையில் கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியின் டெஸ்ட் துணை கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.எல் ராகுலுக்கு இன்றைய மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக சுப்மன் கில் விளையாடுவார் என்று ரோகித் சர்மா டாசுக்கு பிறகு கூறினார்.

கே.எல் ராகுலுக்கு தொடர்ச்சியாக ஆதரவினை வழங்கி வந்த ரோகித் சர்மா இன்று டாசுக்கு பிறகு பேசுகையில் முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் விளையாடுகிறார் என்றும் அறிவித்தார். ஆனால் எப்பொழுதுமே தான் ஆதரவளித்து வரும் கே.எல் ராகுல் வெளியேற்றம் குறித்து எந்த ஒரு கருத்தையும் அவர் டாசுக்கு பிறகு தெரிவிக்கவில்லை.

KL-Rahul

இப்படி ரோஹித் சர்மா கே.எல் ராகுல் குறித்து எதுவுமே பேசாமல் நகர்ந்து சென்றது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில் டாசுக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா கூறியதாவது : இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம். தற்போது நமது அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் நீங்கள் கூறியது போலவே அதிக மனஉறுதி உள்ள ஒரு அருமையான அணியாக இருக்கிறது. நமது அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் தங்களது திறமையின் மீது நம்பிக்கை வைத்து அதனை முன்னெடுத்து செல்ல காத்திருக்கின்றனர்.

- Advertisement -

நாங்கள் இங்கு நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். ஆனால் இந்த மைதானத்தில் ஆடுகளம் சற்று வறண்டு இருப்பதால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நாம் கணித்து அதற்கு ஏற்றார் போல் நமது திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுவரை நாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியினை உறுதி செய்யவில்லை.

இதையும் படிங்க : வீடியோ : முதல் ஓவரிலேயே கிடைத்த 2 அதிர்ஷ்டத்தை கோட்டை விட்ட ரோஹித் சர்மா – 3வது டெஸ்டில் இந்தியா திணறல்

கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடியது போன்றே இந்த போட்டியிலும் விளையாடி வெற்றியினை பெற்று அந்த இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய ரோஹித் இன்றைய போட்டியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் கே.எல் ராகுலுக்கு பதிலாக கில் வருகிறார். முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் வருகிறார் என்று கூறினாரே தவிர கே.எல் ராகுல் ஏன் வெளியேற்றப்பட்டார் என்று குறித்த தகவலை அவர் கூறமலே சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement