
ஐ.பி.எல் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டும் தொடர்ந்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏனெனில் இந்த ஆண்டு முதல் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றனர். இதன் காரணமாக இனிவரும் போட்டிகள் அந்த அணிக்கு முக்கியமான போட்டிகளாக மாறியுள்ளன. இவ்வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு பெரிய பின்னடைவை தரும் விடயமாக ரோகித் சர்மா குறித்து ஒரு தகவல் வெளியாகி பலரது மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணியானது மும்பை வான்கடே மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடியது. அந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய ரோகித் சர்மா 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த வேளையில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக போட்டியின் பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் மீண்டும் அவர் பேட்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை.
பின்னர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்ட அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தசைநார் கிழிவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ஏப்ரல் 16-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தொடைப்பகுதியில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில் அவர் ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் வரை ஓய்வெடுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இப்படி நடந்து ரொம்ப நாள் ஆச்சு.. கண்டிப்பா என்கிட்ட இருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் வரும் – ருதுராஜ் அதிரடி
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவரது காயம் தீவிரமடையும் பட்சத்தில் அடுத்த சில போட்டிகளையும் ரோகித் சர்மா தவறவிட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.