சிக்ஸர்ன்னா இனி ஹிட்மேன் தான். நியூசி வீரர் மாட்டின் கப்திலை பின்னுக்கு தள்ளி உலகசாதனை – கெயிலை மிஞ்சவும் வாய்ப்பு

Rohit-Guptill
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 352 ரன்கள் குவித்தது.

பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடி காட்டியது. இருப்பினும் இறுதியில் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா 57 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 81 ரன்கள் அடித்து அசத்தினார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர் அடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதோடு சேர்த்து தற்போது உலக சாதனை படைக்கவும் வழி வகுத்துள்ளது. அந்த வகையில் ஒரே நாட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக இதுவரை நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் தான் முன்னிலையில் இருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் குப்தில் நியூசிலாந்தில் மட்டும் 256 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்நிலையில் நேற்று 6 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ரோகித் சர்மா இந்திய மண்ணில் 257 சிக்ஸர்கள் அடித்து ஒரு நாட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 551 சிக்ஸர்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : முதல் 2 போட்டிகளில் தோற்றாலும் எங்களுக்கு இந்த விஷயத்தை நினச்சா சந்தோஷமா தான் இருக்கு – லாபுஷேன் பேட்டி

இதன் மூலம் அவர் கிரிஸ் கெயிலின் சாதனை ஒன்றினையும் முறியடிக்க உள்ளார். ஏனெனில் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் 553 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது ரோகித் சர்மா 551 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இன்னும் கெயிலின் சாதனையை முறியடிக்க மூன்று சிக்ஸர்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே அவர் கெயிலை மிஞ்ச வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement