IND vs AUS : முதல் 2 போட்டிகளில் தோற்றாலும் எங்களுக்கு இந்த விஷயத்தை நினச்சா சந்தோஷமா தான் இருக்கு – லாபுஷேன் பேட்டி

Marnus
- Advertisement -

எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணியானது ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்று கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்த வேளையில் மூன்றாவது ஒருநாள் போட்டியானது ராஜ்கோட் நகரில் செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்த போட்டியின் போது டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 96 ரன்களும், ஸ்மித் 74 ரன்களும், மார்னஸ் லாபுஷேன் 72 ரன்களும் குவித்து அசத்தினர்.

பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்களை குவித்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி இழந்திருந்தாலும் கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்று அதே முமென்ட்டத்துடன் தற்போது உலக கோப்பையை அணுகவுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லாபுஷேன் இந்த போட்டி குறித்து கூறுகையில் : எனது அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பந்து பழையதாக மாறிய பின்னர் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருந்தாலும் அதனை நாங்கள் சிறப்பாக செய்து கொண்டு நல்ல ஸ்கோர் குவித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டியின் முடிவு எங்களுக்கு மிகச் சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க : வீடியோ : ராகுல் கையால் வாங்க வைத்த.. கோப்பையை டீம்’லயே இல்லாதா சௌராஷ்டிரா வீரர்கள் உயர்த்திய.. நெகிழ்ச்சியான பின்னணி

எங்களது அணி வீரர்கள் இந்த போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த மைதானத்தில் அடித்து ஆடுவது கடினமாக இருந்தாலும் நாங்கள் நன்றாகவே பேட்டிங் செய்துள்ளோம். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் நாங்கள் தோற்று இருந்தாலும் மீண்டும் வந்து இந்த கடைசி போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு இந்த போட்டியானது எங்களுக்கு திருப்தியாகவும் அமைந்தது என லாபுஷேன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement