ராகுல் கையால் வாங்க வைத்த.. கோப்பையை டீம்’லயே இல்லாதா சௌராஷ்டிரா வீரர்கள் உயர்த்திய.. நெகிழ்ச்சியான பின்னணி

Saurastra Players.jpeg
- Advertisement -

ஆசிய கோப்பையில் வெற்றி வாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2023 உலகக் கோப்பை இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியாவை கடைசி போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதன் காரணமாக கேஎல் ராகுல் தலைமையில் சில முக்கிய வீரர்களை இல்லாமலேயே களமிறங்கி அடுத்தடுத்த வெற்றிகளை கண்ட இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

நெகிழ்ச்சியான பின்னணி:
அந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் 3வது போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் திரும்பினார்கள். ஆனால் அதில் சுப்மன் கில் ஓய்வெடுத்த நிலைமையில் இஷான் கிசான் திடீரென உடல்நிலை சரியில்லாததால் இப்போட்டியில் களமிறங்கவில்லை. அதே போல ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட மேலும் சில முக்கிய வீரர்கள் சொந்த காரணங்களால் இப்போட்டியில் விளையாடாததால் இந்திய அணியில் பற்றாக்குறை ஏற்பட்டது.

இருப்பினும் நிலைமையை சமாளிப்பதற்காக போட்டி நடைபெற்ற சௌராஷ்ட்ரா மாநில வாரியத்தை சேர்ந்த தர்மேந்திரசிங் ஜடேஜா, பிரேரேக் மன்கட், விஸ்வராஜ் ஜடேஜா மற்றும் ஹர்விக் தேசாய் ஆகிய 4 உள்ளூர் வீரர்கள் இந்திய அணியில் தற்காலிகமாக இணைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து போட்டி முழுவதும் தேவைப்படும் நேரங்களில் கூல்டிரிங்ஸ் தூக்கிய அவர்கள் முதன்மை வீரர்களுக்கு உதவியாக இருந்தனர்.

- Advertisement -

அந்த நிலைமையில் போராடி தோல்வியை சந்தித்தாலும் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்றதற்காக பரிசளிக்கப்பட்ட வெற்றிக் கோப்பையை வாங்குவதற்கு கேப்டன் ரோகித் சர்மா அழைக்கப்பட்டார். ஆனால் முதலிரண்டு போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த ராகுல் தான் அதற்கு முக்கிய காரணம் என்று கருதிய ரோகித் சர்மா அவரை வரவைத்து அவரது கையாலேயே கோப்பையை வாங்க வைத்தது ரசிகர்களின் நெஞ்சத்தை தொட்டது.

ஆனால் அவரை மிஞ்சி ஒரு படி மேலே சென்ற ராகுல் தாம் வாங்கிய கோப்பையை சௌராஷ்ட்ரா உள்ளூர் வீரர்களிடம் கொடுத்து மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். குறிப்பாக இந்தியாவுக்காக என்றாவது ஒருநாள் விளையாட மாட்டோமா என்ற கனவுடன் காத்திருக்கும் அவர்கள் முதலில் ஓரமாக நின்றனர். இருப்பினும் அவர்களை நடுப்பகுதிக்கு அழைத்த ராகுல் கோப்பையை வழங்கினார். அதைத்தொடர்ந்து அந்த இளம் வீரர்கள் கோப்பையை உயர்த்தி இந்தியாவின் வெற்றியை கொண்டாடியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

Advertisement