அஷ்வினை விட சேவாக் மாதிரி அவர் தான் இந்தியாவுக்கு சூப்பரான தொடக்கம் கொடுத்துருக்காரு – ரவி சாஸ்திரி பாராட்டு

Ravi-Shastri
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதனால் வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ள இந்தியா அடுத்ததாக பிப்ரவரி 17ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியிலும் வெல்லும் முனைப்புடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக இத்தொடரில் நாக்பூர் பிட்ச் பற்றி தடாலடியாக விமர்சித்த ஆஸ்திரேலியா அதை செயலில் காட்டாமல் மோசமான தோல்வியை சந்தித்தது.

Ashwin

- Advertisement -

அத்துடன் ரவிச்சந்திரன் அஷ்வின் பெரிய சவாலை கொடுப்பார் என்று கருதி அவரைப் போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா எனும் லோக்கல் ஸ்பின்னரை தேடிப் பிடித்து ஆஸ்திரேலிய அணியினர் பயிற்சி எடுத்தனர். இறுதியில் தமக்கு போட்ட திட்டங்களை தவிடு பொடியாக்கிய அஸ்வின் 8 விக்கெட்களையும் 23 ரன்களையும் குவித்து எதிர்பார்த்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். ஆனால் உண்மையாகவே சுழலுக்கு சாதகமாக இருந்த அந்த மைதானத்தில் பேட்டிங்கில் சதமடித்து 120 ரன்கள் குவித்த ரோகித் சர்மா எதிர்பாராத செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

சேவாக் மாதிரி:
குறிப்பாக விராட் கோலி, புஜாரா போன்ற கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தவர்களை விட மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் சுழலுக்கு சாதகமான நாக்பூர் பிட்ச்சில் எப்படி விளையாட வேண்டும் என்பதை காட்டியதாக இயன் சேப்பல் போன்ற முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் மனதாரப் பாராட்டினார். இந்நிலையில் இத்தொடரில் அஷ்வின், விராட் கோலி ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தாலும் ரோகித் சர்மா தான் உண்மையான நல்ல தொடக்கத்தை இந்தியாவுக்கு கொடுத்துள்ளதாக ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

Sehwag

குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் ஃபார்ம் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் என்று ரவி சாஸ்திரி ஆரம்பத்தில் பேட்டியளித்திருந்தார். ஆனால் இத்தொடரில் கடினமான சூழ்நிலைகளிலும் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் போல ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி எதிரணிகளை செட்டிலாக விடாமல் செய்வதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இந்திய மண்ணில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அவருடைய புள்ளி விவரங்கள் அற்புதமாக உள்ளது. அவர் இத்தொடரின் ஆரம்பத்திலேயே விதிமுறைகளை ஆணையிடுவார்”

- Advertisement -

“அந்த இடத்தில் அஸ்வின், விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோரை பற்றி நாம் பேசினோம். ஆனால் ரோகித் சர்மா தான் தற்போது அந்த இடத்தில் இருக்கிறார். ஒருவேளை இந்த நல்ல தொடக்கத்தை அவர் இத்தொடர் முழுவதும் பயன்படுத்தினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும். குறிப்பாக அவருடைய பார்ம் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கலாம். இதை அவர் அடிக்கும் ரன்களை வைத்து மட்டும் நான் சொல்லவில்லை. அவர் எந்த வேகத்தில் அதை குவிக்கிறார் என்பதை வைத்து சொல்கிறேன்”

Shastri

“அதாவது ரோகித் சர்மா களத்தில் இருந்தால் அவர் விரைவாக ரன்களை சேர்ப்பார். அவர் எந்த பவுலரையும் செட்டிலாக விடமாட்டார். குறிப்பாக வீரேந்திர சேவாக் நல்ல ஃபார்மில் இருக்கும் போது எப்படி ரன்கள் வேகமாக வருமோ அதே போல ரோகித் சர்மா களத்தில் இருந்தால் ரன்கள் தாமாக வரும். எப்போதுமே வீரேந்திர சேவாக் நல்ல ஃபார்மில் இருந்தால் எதிரணிகளை ஆரம்பத்திலேயே பந்தாடி மிடில் ஆர்டரின் வேலையை மிகவும் சுலபமாக்கி விடுவார். அதே போன்ற வேலையை ரோகித் சர்மா இத்தொடரில் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அவங்கள மட்டும் அவுட் பண்ணா மொத்த இந்தியாவும் சேந்து உங்கள திட்டும் – 2 நட்சத்திர வீரர்களை பாராட்டும் நேதன் லயன்

அவர் கூறுவது போல முதல் போட்டியில் ஆரம்பத்தில் அதிரடியாக பேட்டிங் செய்து விரைவாக அரை சதம் கடந்த ரோகித் சர்மா விராட் கோலி, புஜாரா போன்ற முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்த பின் நிதானமாக செயல்பட்டு இறுதியில் 55 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் சதமடித்தார். எனவே சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்ட இத்தொடரில் சேவாக் போல அதிரடி காட்டக்கூடிய ரோகித் சர்மா வெற்றியாளரை தீர்மானிப்பவராக இருப்பார் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Advertisement