அவங்கள மட்டும் அவுட் பண்ணா மொத்த இந்தியாவும் சேந்து உங்கள திட்டும் – 2 நட்சத்திர வீரர்களை பாராட்டும் நேதன் லயன்

Lyon
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டனில் வரும் ஜூலை மாதம் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்துள்ள அந்த அணி கடைசி 2 தொடர்களில் தங்களை சொந்த மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்கியது.

IND vs AUS Steve SMith

- Advertisement -

ஆனால் களமிறங்குவதற்கு முன்பாகவே குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக வேண்டுமென்றே இந்தியா சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைத்திருந்ததாக குற்றம் சாட்டிய ஆஸ்திரேலியா நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் வாயில் பேசியதை செயலில் காட்டாமல் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக 177, 91 என 2 இன்னிங்ஸிலும் குறைவான ரன்களுக்கு ஆல் அவுட்டான அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்தது. மறுபுறம் அதே மைதானத்தில் 400 ரன்கள் குவித்த இந்தியா பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் கச்சிதமாக செயல்பட்டு ஆஸ்திரேலியர்களின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கியது.

மொத்த இந்தியாவும்:
அதனால் டெல்லியில் நடைபெறும் அடுத்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்து தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக அஷ்வின் போலவே அனுபவத்தையும் 450+ விக்கெட்டுகளையும் எடுத்துள்ள ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நேதன் லயன் முதல் போட்டியில் தடுமாறினாலும் வரலாற்றில் பலமுறை இந்திய அணிக்கு எதிராக அற்புதமாக செயல்பட்டுள்ளார்.

Sachin

குறிப்பாக தனது கேரியரின் ஆரம்ப காலத்திலேயே ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அவுட்டாக்கியுள்ள அவர் 2014 முதல் இப்போது வரை விராட் கோலியை மட்டும் 7 முறை அவுட் செய்துள்ளார். ஆனால் இந்தியாவின் ஹீரோக்களாக கொண்டாடப்படும் அவர்களை குறிப்பாக இந்திய மண்ணில் அவுட் செய்யும் போது மொத்த ரசிகர்களும் தம்மை வெறுப்பதை போன்ற உணர்வை பலமுறை சந்தித்துள்ளதாக நேதன் லயன் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலிக்கு எதிராக நீங்கள் பந்து வீச வரும் போது மொத்த நாடும் உங்களுக்கு எதிராக வருவது போன்ற உணர்வை கொடுக்கும். அத்துடன் அவருக்கு எதிராக நீங்கள் வெற்றிகரமாக செயல்பட்டாலோ அல்லது அவுட்டாக்கினாலோ மிக விரைவில் நீங்கள் இந்த உலகில் மிகவும் வெறுக்கப்படும் கிரிக்கெட் வீரராக மாறி விடுவீர்கள். குறிப்பாக சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக பல வருடங்களுக்கு முன்பாக விளையாடிய போது அந்த சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டுள்ளேன்”

lyon 2

“தற்போது விராட் கோலி இந்த உலகிலேயே மிகச் சிறந்த வீரராக நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறார். அவர் எப்போதுமே உயர்ந்த தரத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் திறமை பெற்றவர். அதனால் அவரைப் போன்ற ஒரு தரமான ஒருவருக்கு எதிராக போட்டியிடுவதை நான் கெளரவமாக கருதுகிறேன். எப்போதுமே நான் உலகின் சிறந்தவர்களுக்கு எதிராக போட்டியிடுவதை விரும்புகிறேன். அந்த வகையில் விராட் கோலி கடந்த பல வருடங்களில் எனக்கு நிறைய சவால்களை கொடுத்துள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -

பொதுவாகவே சச்சின் போன்ற வீரர்களை எதிரணியினர் அவுட் செய்யும் போது இந்திய ரசிகர்கள் அந்த பவுலர்களை கடுமையாக வெறுப்பது வழக்கமாகும். குறிப்பாக கொல்கத்தாவில் ஒரு முறை சச்சினை முறையற்ற வழியில் ரன் அவுட் செய்ததற்காக மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் வெளியேறி பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை மறக்கவே முடியாது.

இதையும் படிங்க: கட்டை விரலை காமிச்சது ஒரு குத்தமா? ஸ்டீவ் ஸ்மித்தை வெளுத்து வாங்கிய – ஆலன் பார்டர்

அது போலவே தற்போது விராட் கோலிக்கு எதிராக பந்து வீசும் போது உலகம் முழுவதிலும் இருக்கும் அவரது ஏராளமான ரசிகர்கள் தம்மை வெறுப்பது தெளிவாக உணர முடிவதாக நேதன் லயன் வெளிப்படையாக பேசியுள்ளார். இருப்பினும் அவரைப் போன்ற தரமான வீரருக்கு எதிராக பந்து வீசுவதை சவாலாகவும் மிகப் பெரிய கௌரவமாகவும் நினைப்பதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement