கட்டை விரலை காமிச்சது ஒரு குத்தமா? ஸ்டீவ் ஸ்மித்தை வெளுத்து வாங்கிய – ஆலன் பார்டர்

Steve-Smith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பெற்ற தோல்விக்கு மோசமான ஆடுகளம் தான் காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்தன.

IND vs AUS Steve SMith

- Advertisement -

அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில் : தோல்விக்கான காரணமாக ஆடுகளங்களை குறை கூறவேண்டாம். வீரர்கள் தான் கவனத்துடன் ஆட வேண்டும் என்றும் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசிய வேளையில் ஒரு சமயத்தில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் தனது கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காண்பித்தார்.

எப்பொழுதுமே தனக்கு எதிராக சிறப்பாக செயல்படும் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பந்து நன்றாக வந்தால் அவர் கட்டைவிரலை உயர்த்தி அவர்களை பாராட்டுவது வழக்கம். இப்போது மட்டுமல்ல பலமுறை ஸ்டீவ் ஸ்மித் இதேபோன்ற வாழ்த்துக்களை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பகிர்ந்துள்ளார்.

Steve Smith 1

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இப்படி கட்டைவிரலை காட்டியது தவறான ஒன்று என்று ஆஸ்திரேலியாவில் முன்னாள் கேப்டனான ஆலன் பார்டர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலியாவின் பெயரையே தற்போது இருக்கும் வீரர்கள் கெடுத்து விட்டார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் எப்போதுமே களத்தில் கடினமாக நடந்து கொள்வார்கள்.

- Advertisement -

ஆனால் தற்போது தமக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் பந்துவீச்சாளர்களை பார்த்து கட்டை விரலை உயர்த்தி பாராட்டுகிறார்கள். இதெல்லாம் அபத்தமானது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது. முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதீர்கள் என்று ஸ்டீவ் ஸ்மித்தை கடுமையாக விளாசியிருந்தார், இந்நிலையில் இந்த கருத்திற்கு பதில் அளித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கூறுகையில் : ஆலன் பார்டரை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.

இதையும் படிங்க : எதிர்வரும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் புஜாரா படைக்கபோகும் – சாதனைகள் என்னென்ன தெரியுமா?

இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடுவதால் வெவ்வேறு விஷயங்களை அவர்களுக்கு எதிராக செய்து வருகிறோம். அந்த வகையில் தான் ஸ்மித் பவுலரை பாராட்டினார். இதில் வேறு எந்த தவறும் கிடையாது. பவுலர்களை பாராட்டுவதன் மூலம் விளையாட்டில் மேலும் அதிகமாக கவனம் செலுத்த முடியும் என்று அவர் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement