எதிர்வரும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் புஜாரா படைக்கபோகும் – சாதனைகள் என்னென்ன தெரியுமா?

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் என்பதனால் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்பட்டு வருகிறது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியும் ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதினால் அந்த அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வது உறுதி.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 17-ஆம் தேதி டெல்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியின் அனுபவ வீரரான புஜாரா தனது நூறாவது (100-ஆவது)டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார்.

Pujara 1

அதோடு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவர் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவே நூறாவது டெஸ்ட் போட்டியிலும் களம் காண காத்திருக்கிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமான புஜாரா தற்போது நூறாவது போட்டியில் விளையாடும் 13-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளார்.

- Advertisement -

அதோடு தற்போதைய அணியில் 100 போட்டிகளில் விளையாடும் இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் விராட் கோலிக்கு அடுத்து படைக்க இருக்கிறார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 7021 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 206 ரன்களை அடித்துள்ளார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா ஆடுறத பாத்தா எப்படி இருக்கு தெரியுமா? ஆஹா ஓஹோனு புகழ்ந்து தள்ளிய – நியூசி முன்னாள் வீரர்

இதில் 34 அரை சதங்களும், 19 சதங்கள் மற்றும் மூன்று இரட்டை சதங்களும் அடங்கும். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 21 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 சதங்கள் 10 அரை சதங்கள் உட்பட 1900 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement