ரோஹித் சர்மா ஆடுறத பாத்தா எப்படி இருக்கு தெரியுமா? ஆஹா ஓஹோனு புகழ்ந்து தள்ளிய – நியூசி முன்னாள் வீரர்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Rohit Sharma

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு இருந்தாலும் அதே சமயத்தில் முதல் இன்னிங்ஸ் போது இந்திய அணி அடித்த 400 ரன்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 15 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 120 ரன்கள் அடித்து இந்திய அணியின் பெரிய ரன் குவிப்புக்கு உதவியாக இருந்தார்.

அவரது இந்த சிறப்பான பேட்டிங் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வரும் வேளையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான சைமன் டவுல் ரோகித் சர்மாவின் சதம் குறித்த பாராட்டுகளை வெளிப்படையாக பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Simon Doull

கடினமான சூழ்நிலைகளில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுகிறார். கடுமையாக போராடும் வீரர்களில் ஒருவர் என்றால் நான் ரோகித் சர்மாவை நினைக்கிறேன். ஏனெனில் எந்த எதிரணியாக இருந்தாலும் அந்த அணிக்கு எதிராக துணிச்சலான பேட்டிங்கை வெளிப்படுத்தும் அவர் முடிந்தால் மோதிப்பார் என்று என்பது போல் துணிச்சலாக விளையாடுகிறார்.

- Advertisement -

அதோடு அவரது கேப்டன்சியும் கொஞ்சம் துணிச்சலாகவே இருக்கிறது. நெருப்பை அணைக்கும் துணிகரம் அவரிடம் இருக்கிறது என்று கூறியிருந்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ரோகித் சர்மா இந்த முதலாவது போட்டியில் மிகவும் ஆக்ரோஷமாக பந்துகளை விளாசினார். அவர் பேட்டிங் செய்யும்போது அவருடைய நம்பிக்கை எந்த அளவில் இருக்கிறது என்று வெளிப்பட்டது.

இதையும் படிங்க : இவரை மாதிரி ஒரு ஆல்ரவுண்டர் கெடைக்குறது எல்லாம் ரொம்ப அதிர்ஷ்டம் தான் – இந்திய வீரரை புகழ்ந்த டேனிஷ் கனேரியா

இந்திய அணி எப்போதுமே ஜடேஜா மற்றும் அக்சரை மட்டுமே ஆடப்போகிறதா என்று தெரியவில்லை. ஏனெனில் குல்தீப் யாதவும் பிளேயிங் லெவனில் இருந்திருக்கலாம். கண்டிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement