இவரை மாதிரி ஒரு ஆல்ரவுண்டர் கெடைக்குறது எல்லாம் ரொம்ப அதிர்ஷ்டம் தான் – இந்திய வீரரை புகழ்ந்த டேனிஷ் கனேரியா

Kaneria
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.

IND vs AUS Steve SMith

ஏனெனில் பந்துவீச்சில் முதல் இன்னிங்சின் போது 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் 70 ரன்கள் குவித்ததன் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டான ரவீந்திர ஜடேஜாவை பாராட்டி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : உலக கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜாவை போன்ற ஒரு ஆல் ரவுண்டரை பார்ப்பது கடினம்.

Ravindra-Jadeja

ஏனெனில் அவர் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலுமே அவர் திறம்பட செயல்படுகிறார். எந்த வகையான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுவதாக இருந்தாலும் நிச்சயம் பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் உறுதி. அந்த அளவிற்கு அவர் அணிக்கு வலு சேர்க்கிறார்.

- Advertisement -

கடந்த ஆறு மாதங்களாகவே அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருந்தாலும் தற்போது மீண்டு வந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று டேனிஷ் கனேரியா புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முரளி விஜய் மாதிரி அவரையும் யாரையுமே கொண்டாடுவதில்லை – நட்சத்திர வீரரை ஆதங்கத்துடன் பாராட்டிய அஷ்வின்

இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காலில் செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு கடந்த ஆறு மாதங்களாக ஓய்வில் இருந்த வேளையில் தேசிய கிரிக்கெட் அகாடமிவில் பயிற்சியினை முடித்து தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கம்பேக் போட்டியிலேயே அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement