முரளி விஜய் மாதிரி அவரையும் யாரையுமே கொண்டாடுவதில்லை – நட்சத்திர வீரரை ஆதங்கத்துடன் பாராட்டிய அஷ்வின்

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் குறைந்தது 3 போட்டிகளை வென்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெரும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது. கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் துறையில் மிரட்டலாக செயல்பட்ட இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை வெறும் 3 நாட்களில் சுருட்டி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

Pujara

- Advertisement -

இதை தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி பிப்ரவரி 17ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் துவங்குகிறது. இப்போட்டியில் நட்சத்திர இந்திய சீனியர் வீரர் செடேஸ்வர் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி பெரும்பாலான போட்டிகளில் களத்தில் பொறுமையின் சிகரமாக நங்கூரமாக நின்று அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படையை வைக்கும் டெக்னிக்கை பின்பற்றும் அவர் பெரிய ரன்களை குவித்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

மிருகத்தை போல:
குறிப்பாக 2018/19இல் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைப்பதற்கு 500+ ரன்களை குவித்த அவர் தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். மேலும் 2020/21 தொடரில் பெரிய ரன்களை குவிக்கவில்லை என்றாலும் அதிக பந்துகளை எதிர்கொண்டு உடம்பில் அடி வாங்கி பாறையாக நின்று இந்தியாவின் வெற்றியை பங்காற்றிய அவர் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடந்த வருடம் அதிரடியாக நீக்கப்பட்டார்.

vijayaswin

அப்போது 100 போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவினாலும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அபாரமாக செயல்பட்டு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள அவர் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளி விளையாடும் 12வது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் படைக்க உள்ளார். இந்நிலையில் விராட் கோலி போல புஜாராவை யாருமே கொண்டாடுவதில்லை என்று ரவிச்சந்திரன் அஷ்வின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் 2011 – 2015 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழக வீரர் முரளி விஜய் போல புஜாராவையும் யாரும் பெரிதாக பாராட்டுவதில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னைப் பொறுத்த வரை சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோரைப் போல வெளிநாட்டு மண்ணில் முரளி விஜய் இந்தியாவின் மிகச்சிறந்த தொடக்க வீரர். அவரை போன்ற புஜாராவையும் நாம் யாரும் அதிகம் கொண்டாடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் மிகவும் கடினமான வேலையை செய்துள்ளனர். அதாவது சவாலான சூழ்நிலைகளில் வெளிநாடுகளில் புதிய பந்தை எதிர் கொண்டார்கள். எனவே அந்த வகையான பார்ட்னர்ஷிப்பிலிருந்து சில விசித்திரங்கள் வெளிப்படுவது பாடத்திற்கு சமம்”

pujara 1

“குறிப்பாக 2018/19 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பட் கமின்ஸ் தொடர்ந்து நல்ல பந்துகளை வீசிக் கொண்டே இருந்தார். கோணத்தை மாற்றி பவுன்சர் பந்துகளை வீசி அவர் பெரிய சவாலை கொடுத்தார். ஆனால் அவை அனைத்தையும் புஜாரா ஒன்று அடிக்காமல் விடுவார் அல்லது மொத்தமாக தடுத்து நிறுத்தினார். சொல்லப்போனால் ஆரம்பத்தில் புஜாராவிடம் இந்தளவுக்கு சிறந்த டிஃபன்ஸ் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவரது பிடிவாதமான தடுப்பாட்டத்தால் உலகின் சிறந்த பந்து வீச்சுகளை அவர் முறியடித்துள்ளார்.”

- Advertisement -

“நிறைய பேட்ஸ்மேன்கள் வெற்றிகரமாக செயல்படும் போது சிலவற்றை தங்களது ஆட்டத்தில் இணைத்துக் கொள்வார்கள். அதே போல் சிலர் சுமாராக செயல்படும் போது சிலவற்றை தவிர்த்து விடுவார்கள். ஆனால் புஜாரா தொடர்ந்து தனது அணுகு முறையில் நம்பிக்கை வைத்துள்ளார். அவரிடம் நீங்கள் மாற்றத்தை செய்யுமாறு பேசி சமாளிக்க முடியாது. அவருக்கு தமிழில் நான் சங்கர் பாசு எனும் பட்டப்பெயர் வைத்துள்ளேன்”

இதையும் படிங்க: யாரோ எடிட்டிங் சதி பண்ணிட்டாங்க, காதலர் தினத்தில் சிக்கிய பிரிதிவி ஷா – கலாய்க்கும் ரசிகர்கள், நடந்தது என்ன

“அந்தப் பெயர் எங்களுடைய முன்னாள் பயிற்சியாளர் பெயராகும். அவருடைய பட்டப்பெயர் மிருகம் பீஸ்ட் ஆகும். அதாவது மிருகம் தனது இலக்கில் மட்டும் முழு மனதுடன் வேட்டையாட கவனத்தை வைத்திருப்பது போல புஜாரா தன்னுடைய முழு கவனத்தை எப்போதும் பேட்டிங்கில் வைத்திருப்பார்” என்று பாராட்டினார்.

Advertisement