உலகம் முதுவதிலும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று வழக்கம் போல காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் உண்மையான நேசம் வைத்துள்ள அனைத்து காதல் ஜோடிகளும் கணவன் மனைவிகளும் தங்களது காதல் பரிமாற்றத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர். மேலும் புதிதாக காதலிக்க தொடங்கியவர்கள் வேண்டுமென்றே சில ஸ்டேட்டஸ்களை போட்டு காதலி கிடைக்காமல் கன்னித்தன்மையுடன் காத்திருக்கும் சிங்கிள்களை வெறுப்பேற்றிய தருணங்களையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. பொதுவாகவே காதலர் தினம் தங்களது காதலை காதலியிடம் அல்லது காதலனிடம் வெளிப்படுத்தும் ஒரு நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பெரிய நட்சத்திர வீரர்கள் காதலர் தினத்தில் தங்களது காதலை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக வெள்ளைப் பந்து அணியின் கேப்டனாக திகழும் ஹர்திக் பாண்டியா தனது மனைவியுடன் அவர்களது முறைப்படி 2வது முறையாக மீண்டும் திருமணம் செய்து கொண்டார். அந்த நிலையில் இந்திய அணியின் இளம் நட்சத்திர தொடக்க வீரரான பிரிதிவி ஷா பிரபல நடிகை மற்றும் மாடல் அழகியான நிதி தாபாடியாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காதலை வெளிப்படுத்தினார்.
எடிட்டிங் பண்ணிட்டாங்க:
குறிப்பாக சிங்கிள் ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில் தமது காதலியுடன் உதட்டோடு உதடு முத்தமிடுவதற்கு செல்வது போன்ற புகைப்படத்தை “வைபி” அதாவது “மனைவி” என்ற தலைப்புடன் அவர் பதிவிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இதுவரை இது போன்ற காதல் விஷயத்தை வெளிப்படுத்தாமல் எவ்விதமான கிசுகிசுகளிலும் சிக்காமல் இருந்து வந்த பிரிதிவி ஷா தம்முடைய காதலை வெளிப்படுத்தியதால் ஆச்சரியமடைந்து உடனடியாக அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்தனர்.
அதனால் காதலர் தினத்தில் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பிரிதிவி ஷா காதல் செய்தி தான் தீயாக பரவியது. ஒரு கட்டத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனதை கவனித்த பிரிதிவி ஷா இது தம்முடைய பெற்றோர்களின் கவனத்திற்கு சென்றால் திட்டு விழும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை உடனடியாக அதை டெலிட் செய்து விட்டார்.
ஆனாலும் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து தொடர்ந்து ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்ததால் கடுப்பான அவர் வழக்கம் போல யாரோ ஒருவர் எடிட்டிங் செய்து அந்த மாதிரியான புகைப்படத்தை பதிவிட்டு விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவை பதிவிட்டு தெளிவுபடுத்தியுள்ளார். குறிப்பாக யாரோ ஒருவர் தம்முடைய புகைப்படங்களை எடிட்டிங் செய்து தாம் பதிவிட்டது போல் பதிவு செய்ததால் அதை யாரும் நம்பாமல் தவிர்க்குமாறு ரசிகர்களிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இருப்பினும் அதை நம்பாத ரசிகர்கள் வரலாற்றில் பலமுறை இது போல அட்மின் தான் போட்டார், எடிட்டிங் செய்து விட்டார்கள் என்று நட்சத்திரங்கள் கூறியதைப் போல் நீங்களும் சொல்வது எங்களுக்கு புரிகிறது என்று அவரை கலாய்த்து வருகிறார்கள். முன்னதாக 2018 அண்டர்-19 உலக கோப்பையை இந்தியாவுக்கு கேப்டனாக வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் முதல் டெஸ்ட் போட்டிலேயே சதமடித்து அசத்தினாலும் நாளடைவில் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு தொடர்ந்து சிறப்பாக செயல்படத் தவறியதால் கழற்றி விடப்பட்டார்.
மேலும் ஐபிஎல் தொடரிலும் எதிர்பாராத செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் கடந்த வருடத்தில் சயீத் முஷ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு கடுமையாக போராடி 500 நாட்களுக்கும் மேலாக ஒரு வழியாக சமீபத்திய நியூசிலாந்து டி20 தொடரில் இந்திய அணிக்காக தேர்வானார். ஆனால் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறாத அவர் அடுத்ததாக மார்ச் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு பெறுவாரா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரவீந்திர ஜடேஜாவுக்கு முன் பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் சிக்கிய 3 இந்திய ஜாம்பவான் வீரர்கள் – லிஸ்ட் இதோ
அப்படிப்பட்ட நிலையில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவதற்கான கவனத்தைச் செல்வதாமல் இப்படி காதல் மற்றும் கிசுகிசுகளில் சிக்குவது உங்களுக்கு எந்த முன்னேற்றத்தையும் தராது என்று அவருக்கு ரசிகர்கள் அறிவுரை வழங்குவதையும் பார்க்க முடிகிறது.