ரவீந்திர ஜடேஜாவுக்கு முன் பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் சிக்கிய 3 இந்திய ஜாம்பவான் வீரர்கள் – லிஸ்ட் இதோ

Jadeja-and-Siraj
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக தொடக்கத்தை பெற்றுள்ளது. குறிப்பாக நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது வென்று மிகச் சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார். ஆனால் அப்போட்டியின் முதல் நாளில் பந்தை இறுக்கமாக பிடித்து வீசியதால் ஏற்பட்ட வலியை குறைப்பதற்காக வலி நிவாரணியை பயன்படுத்திய அவர் பந்தை சேதப்படுத்தியதாக எதிரணியினர் குற்றம் சுமத்தினர்.

Ravindra Jadeja Ball tampering

அதை ஆராய்ந்த ஐசிசி பந்தை சேதப்படுத்தவில்லை என்றாலும் நடுவரிடம் கேட்காமல் வலி நிவாரணியை பயன்படுத்தியதற்காக அவருக்கு 25% சம்பளம் மற்றும் ஒரு கருப்பு புள்ளியை அபராதமாக விதித்தது. இந்த நிலையில் வரலாற்றில் இதே போன்ற சர்ச்சைகளை சந்தித்த நட்சத்திர இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

3. விராட் கோலி: கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற போட்டியில் கேப்டன் விராட் கோலி பந்தை சேதப்படுத்தியதாக இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பத்திரிக்கை நிறுவனம் குற்றம் சுமத்தியது. குறிப்பாக வாயில் போட்டு மெல்லும் ஸ்விங்கம் போன்ற பொருளைப் பந்தின் மீது பயன்படுத்தி அவர் தேய்த்ததாக வீடியோ ஆதாரத்துடன் அந்த பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இருப்பினும் இங்கிலாந்து அணியினர் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத காரணத்தால் முறைப்படி நடுவரிடம் புகார் கொடுக்கவில்லை. பொதுவாக பந்து சேதப்படுத்தப்பட்ட புகாரை போட்டி நடைபெற்று முடிந்த அடுத்த 5 நாட்களுக்குள் பதிவு செய்தால் மட்டுமே ஐசிசி நடவடிக்கை எடுக்கும். இருப்பினும் இங்கிலாந்து அணியினர் எந்த புகாரும் எழுப்பாததால் ஐசிசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

- Advertisement -

2. ராகுல் ட்ராவிட்: தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட் எப்போதுமே அமைதியானவராகவும் நேர்மையை கடைப்பிடிப்பவராகவும் அறியப்படுபவர். இருப்பினும் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் காபாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இருமலை அடக்குவதற்காக தனது வாயில் வைத்திருந்த மிட்டாயை பயன்படுத்தி அவர் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதை கச்சிதமாக கேமராமேன் படம் பிடித்ததால் சர்ச்சைக்குள்ளான அவருக்கு அப்போதைய கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் பயிற்சியாளர் ஜான் ரைட் ஆகியோர் ஆதரவு கொடுத்தார்கள். குறிப்பாக வழக்கம் போல சலிவாவை பயன்படுத்தி பந்தை தேய்ப்பதற்காக வாயைத் தொட்ட போது கையுடன் அந்த மிட்டாய் போன்ற பொருள் லேசாக ஒட்டிக்கொண்டு வந்து விட்டதாக சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்தனர். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத போட்டியின் நடுவர் க்ளைவ் லாய்ட் போட்டி சம்பளத்திலிருந்து 50% ராகுல் டிராவிட்டுக்கு அதிரடியாக அபராதம் விதித்தார்.

- Advertisement -

1. சச்சின் டெண்டுல்கர்: இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றப்படும் இவரும் இந்த பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம் கடந்த 2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பந்தை சேதப்படுத்தியதாக நடுவர் மைக் டென்னிஸ் குற்றம் சாட்டினார். சொல்லப்போனால் அந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அந்த நடுவர் நடந்து கொண்டதால் இந்திய வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அதனால் ஏற்பட்ட காழ்புணர்ச்சியால் சேவாக், கங்குலி ஆகியோருக்கு நேரடியாக தடை விதித்த அவர் சச்சின் மீது பந்தை சேதப்படுத்திய குற்றத்தையும் சுமத்தினார். அதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தென்னாபிரிக்க வாரியம் ஆதரவு கொடுத்ததால் அத்தொடரின் 3வது போட்டியில் அந்த நடுவர் இல்லாமலேயே இரு அணிகளும் விளையாடின. ஆனால் நடுவர் இல்லாமல் நடைபெற்றதால் இறுதியில் அப்போட்டியை ஐசிசி அங்கீகரிக்க மறுத்து விட்டது.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 : பைனல் நடைபெறும் தேதிகளை வெளியிட்ட ஐசிசி – முழுவிவரம் இதோ

அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த சமயத்தில் பந்தின் மீது படிந்திருந்த பச்சை புற்கள் படிமத்தை நீக்கியதை தங்களிடம் சொல்லாததால் தம்முடைய நேர்மையை போட்டி நடுவர்கள் கேள்வி எழுப்பியதாக நாளடைவில் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் கூறியிருந்தார். அதற்கு தாம் உள்ளிட்ட இந்திய அணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காரணத்தால் சில வீரர்களுக்கு தடையும் தன் மீது பந்தை சேதப்படுத்திய குற்றமும் சுமத்தப்பட்டதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement