இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றன. அந்த நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கிய இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் நாள் முடிவில் 326/5 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 10, சுப்மன் கில் 0, ரஜத் படிடார் 5 என இளம் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் 33/3 என தடுமாறிய இந்திய அணிக்கு மறுபுறம் நங்கூரமாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து 104 ரன்கள் குவித்து சரிவை சரி செய்து அவுட்டானார்.
ஜடேஜாவின் தவறு:
அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா சொந்த ஊரில் அசத்தலாக செயல்பட்டு நான்காவது விக்கெட்டுக்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்தார். அதே போல ரோஹித் சர்மாவுக்கு பின் வந்த இளம் வீரர் சர்பராஸ் கான் தன்னுடைய அறிமுக போட்டியிலேயே அபாரமாக விளையாடி அரை சதமடித்து 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்படி முக்கிய பேட்ஸ்மேன்களின் பொறுப்பான இந்தியா இப்போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.
களத்தில் ஜடேஜா 110*, குல்தீப் யாதவ் 1* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக போராடி ஒரு வழியாக இப்போட்டியில் அறிமுகமான சர்பராஸ் கான் ரோகித் சர்மா அவுட்டானதும் களமிறங்கி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதே வேகத்தில் வரும் 48 பந்துகளில் சதமடித்த அவர் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 62 (66) ரன்கள் எடுத்து நன்கு செட்டிலானார். அப்போது எதிர்புறம் சிறப்பாக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா 99 ரன்களில் இருந்தார்.
அந்த நேரத்தில் 82வது ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா அருகிலேயே அடித்து விட்டு சிங்கிள் எடுப்பதற்காக வெள்ளைக்கோட்டை விட்டு சில அடிகள் வெளியே வந்தார். அப்போது ஜடேஜாவின் 100 ரன்னை முழுமையாக்கி சதத்தை தொட வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சர்பராஸ் கான் ஆர்வமாக எதிர்புறமிருந்து சிங்கிள் எடுக்க வெளியே வந்தார். ஆனால் அதற்குள் இங்கிலாந்து ஃபீல்டர் பந்தை எடுத்ததை பார்த்த ஜடேஜா மீண்டும் தன்னுடைய இடத்திற்கு சென்றார்.
இதையும் படிங்க: 33/3 டூ 237/4.. கேப்டனுடன் சேர்ந்து சொந்த ஊரில் ஹீரோவாக இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா.. அசத்திய சர்பராஸ்
இருப்பினும் அவரை நம்பி வெளியே வந்த சர்பராஸ் மீண்டும் வெள்ளைக்கோட்டை தொடுவதற்குள் இங்கிலாந்து அணியினர் ரன் அவுட் செய்தார்கள். அந்த வகையில் ரவீந்திர ஜடேஜாவின் தவறான கணிப்பால் முதல் போட்டியிலேயே சதமடிக்கும் வாய்ப்பை சர்பராஸ் கான் இழந்து பரிதாபமாக சென்றார். அதை பெவிலியனிலிருந்து பார்த்து கடுப்பான ரோகித் சர்மா தன்னுடைய தலையில் இருந்த தொப்பியை கழற்றி வீசி எரிந்து கோபத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் தன்னுடைய சதம் தவறியதை நினைத்து சரஸ்வராஸ் கானும் பெவிலியனின் சோகத்துடன் மனமடைந்து அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.