வில்லியம்சனின் கேட்சை விட்ட முகமது ஷமிக்கு கேப்டன் ரோஹித் வழங்கிய தண்டனை – என்ன தெரியுமா?

Shami
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான முதலாவது அரையிறுதி போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியானது 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது 398 ரன்கள் என்ற கடினமான இலக்கினை துரத்திய நியூசிலாந்து அணி 39 ரன்களுக்கே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் டேரல் மிட்சல் ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்கு கிட்டத்தட்ட 181 என்று சேர்த்து மூன்றாவது விக்கெட்டுக்கு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்சை முக்கிய நேரத்தில் ஷமி தவறவிட்டார். குறிப்பாக வில்லியம்சன் அரைசதம் அடிப்பதற்கு முன்னதாகவே கொடுக்கப்பட்ட எளிதான கேட்சை முகமது ஷமி தவறவிட்டதால் அந்த வாய்ப்பினை பயன்படுத்திய வில்லியம்சன் அரைசதம் கடந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஒவ்வொரு மேட்ச்லயும் எதிரணிகளை அடிச்சு நொறுக்கி அழிக்கிறாரு.. இந்திய வீரருக்கு அக்தர் அதிரடி பாராட்டு

போட்டியின் முக்கிய நேரத்தில் அவர் கொடுத்த கேட்சை தவறவிட்டதால் அடுத்த போட்டிக்கு முன்னர் ஷமிக்கு கேட்சிங்கிற்காக மட்டும் ஒரு மணி நேரம் கூடுதல் பயிற்சியை செய்ய வேண்டும் என ரோகித் சர்மா தண்டனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்களுக்கு இந்திய அணி பதக்கத்தை வழங்கி வரும் வேளையில் சொதப்பும் வீரர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement