சுனில் கவாஸ்கர் சொல்லியும் கேட்காத ரோஹித் சர்மா. முதல் டெஸ்ட் என்ன ஆகப்போகுதோ? – விவரம் இதோ

Gavaskar-and-rohit
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்யவே முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது.

அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக முகமது ஷமி வெளியேறியுள்ளது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் அவருக்கு பதிலாக மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக பிரசித் கிருஷ்ணா அல்லது முகேஷ் குமார் ஆகிய இருவரில் ஒருவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முகேஷ் குமாரை வெளியில் அமர்த்தி விட்டு பிரசித் கிருஷ்ணாவிற்கு அறிமுக வாய்ப்பை ரோகித் சர்மா வழங்கி உள்ளார்.

இப்படி ரோகித் சர்மா பிரசித் கிருஷ்ணாவிற்கு வழங்கிய அறிமுக வாய்ப்பு குறித்து தான் தற்போது பெரிய அளவில் சமூகவலைத்தளத்தில் விவாதம் எழுந்துள்ளது. ஏனெனில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் :

- Advertisement -

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் முகேஷ் குமாருக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் தான் சிறப்பான பார்மில் உள்ளார் என்றும் தெரிவித்து இருந்தார். மேலும் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் மூன்றாவதாக முகேஷ் குமாரை தான் சேர்க்க வேண்டும். பிரசித் கிருஷ்ணா தற்போது தான் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார் என்பதனால் அவரால் முழுவதுமாக பந்து வீச முடியுமா? என்பது உறுதியல்ல என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : அவரை அவுட் பண்ணதுக்காக.. இந்திய ரசிகர்கள் மோசமான வார்த்தையால் திட்டுனாங்க.. தெ.ஆ வீரர் ஆதங்கம்

இவ்வேளையில் ரோகித் சர்மா பிரசித் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு வழங்கியிருப்பது அனைவருக்கும் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே ரன்களை வாரி வழங்கும் பிரசித் கிருஷ்ணா விக்கெட் டேக்கராக இருந்தது கிடையாது. எனவே அவரது தேர்வு சரிதானா? என்பது போட்டியின் முடிவில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement