அவரை அவுட் பண்ணதுக்காக.. இந்திய ரசிகர்கள் மோசமான வார்த்தையால் திட்டுனாங்க.. தெ.ஆ வீரர் ஆதங்கம்

Tabraiz Shamsi
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்றது. இதைத் தொடர்ந்து 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா விளையாடி வருகிறது.

முன்னதாக இந்த சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்று அசத்தியது. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்க வீரர் தப்ரைஸ் சம்சி 18 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

திட்டிய ரசிகர்கள்:
இந்நிலையில் அந்த போட்டியில் கேப்டன் சூரியகுமார் யாதவ் விக்கெட்டை எடுத்ததற்காக சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் மோசமாக திட்டியதாக சம்சி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பொதுவாக விக்கெட்டுகள் எடுக்கும் போது ஒவ்வொரு வீரர்களும் வித்தியாசமாக கொண்டாடும் நிலையில் இவர் தம்முடைய காலில் போட்டிருக்கும் ஷூ’வை கழற்றி காதில் வைத்து அலைபேசியில் பேசுவது போல் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் சூரியகுமார் யாதவ் விக்கெட்டை எடுத்த போது அப்படி கொண்டாடியதற்காக ரசிகர்கள் திட்டியதாக சம்சி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக தம்மை திட்டினாலும் பரவாயில்லை ஆனால் தம்முடைய குடும்பத்தினர் பற்றி பெயர் தெரியாத ரசிகர்கள் திட்டியது ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரசிகர்கள் இதை எதிர்மறையாக எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் அதை மரியாதை குறைவாக கருதுகின்றனர். அதற்காக நான் நிறைய திட்டுகளை வாங்கினேன். சொல்லப்போனால் அது நான் பார்த்ததிலேயே மோசமானதாக இருந்தது. அது என் மனைவி மீதும் இருந்தது. நான் அதை வரவேற்கவில்லை நீங்கள் வீரர்களைப் பற்றி கேட்க விரும்பினால் பரவாயில்லை. ஆனால் அவர்களது குடும்பத்தை ஈடுபடுத்தி மோசமான விஷயங்களை சொன்னால் அது வேறொரு நிலைக்கு தள்ளும்”

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ இந்தியா வெல்வது கஷ்டம்.. அந்த 2 வெளிநாட்டு அணிக்கே வாய்ப்பிருக்கு.. யுவி கணிப்பு

“இதற்காக வீரர்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக செல்வதால் தாங்கள் பேசுவதற்கான உரிமையை கொண்டுள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். எனவே இதைப் பற்றி நிறைய வீரர்கள் பேச வேண்டும் என்று கருதுகிறேன். உங்களுடைய அணி வெல்லாமல் போனாலும் நீங்கள் மனிதர்களாக நடந்து கொள்ளுங்கள். மிருகத்தைப் போல் இருக்காதீர்கள்” என்று கூறினார்.

Advertisement