பாண்டியா இல்லையென்றால் இவருக்கு தான் வாய்ப்பு. ரசிகர்களே முடிவு பண்ணிட்டாங்க – விவரம் இதோ

Pandya-IND
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆல் ரவுண்டான ஹார்டிக் பாண்டியா நேற்று அக்டோபர் 19-ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற 17-வது லீக் போட்டியின் போது கால் பகுதியில் காயமடைந்த ஹார்டிக் பாண்டியா முதல் மூன்று பந்துகளை வீசிய நிலையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் மீண்டும் அவர் களத்திற்கு திரும்பாத நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்யும்போதும் அவர் வரவில்லை இதன் காரணமாக அவரது காயத்தின் வீரியம் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியை எழுப்பியது.

ஏனெனில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக பார்க்கப்படும் அவரின் இடம் இந்திய அணிக்கு பெருமளவு முக்கியத்துவமாக பார்க்கப்படும் வேளையில் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் விளையாட முடியாமல் போனால் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்படும் என்பதன் காரணமாக அவரது இடம் தற்போது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் சார்பில் செய்தி வெளியாகியது. அதோடு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியிலேயே அவர் மீண்டும் திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அவருக்கு பதிலாக இடம் பெறப்போகும் வீரர் யார்? என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அப்படி ஹார்டிக் பாண்டியா அணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் அவருக்கு பதிலாக ஒரு பேட்டரோ அல்லது ஒரு பவுலரோ அணியில் இணைவார்கள்.

- Advertisement -

ஆனால் இப்படி பாண்டியாவிற்கு பதிலாக அணியில் இணையப்போகும் வீரர் யார் ? என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் ஹார்டிக் பாண்டியா ஒரு மிகச் சிறப்பான ஆல் ரவுண்டர் என்பதால் இரண்டு வீரர்களின் இடத்தை நிரப்பும் அளவிற்கு அவரிடம் பலம் உள்ளது. ஆனால் அவருக்கு பதிலாக ஒன்று பேட்டிங்கையோ அல்லது பவுலிங்கையோ நிலைப்படுத்தக் கூடியவர்களே அணியில் இருப்பார்கள்.

இதையும் படிங்க : ஒரே ஓவரில் 24 ரன்கள்.. துவம்சம் செய்த ஆஸி.. 150 கி.மீ ஃபாஸ்ட் பவுலரான ஹரிஷ் ரவூப் மோசமான சாதனை

அப்படி ஏதாவது ஒரு துறையில் மட்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் அது பாண்டியாவின் இடத்தை யாரும் நிரப்பக்கூடிய வீரர் குறித்த தெளிவை நமக்கு அளிக்கும். ஆனால் அந்த இடத்தை நிரப்ப போகும் வீரர் யார்? என்பது குறித்த கேள்வி இருந்து வருகிறது. ஆனால் தற்போதைய இந்திய அணியை பொருத்தவரைக்கும் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதால் ஆறாவது இடத்தில் நிச்சயம் சூரியகுமார் யாதவ் தான் ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக இடம் பெறுவார் என்றும் மற்ற 5 பவுலாஸ்களும் 10 ஓவர்களை முழுமையாக வீசுவார்கள் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement