இந்த தொடரில் 2 ஆவது முறை.. ஒட்டுமொத்தமாக 7 முறை.. – உலககோப்பையில் சச்சினுக்கு அடுத்து ரோஹித் படைத்த புது ரெக்கார்டு

Rohit
Advertisement

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லக்னோ மைதானத்தில் நேற்று நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஆறாவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ய இந்திய அணி பெரிய ரன் குவிப்பிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போட்டியின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி ஒரு கட்டத்தில் 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், கே.எல் ராகுல் ஆகியோரது பொறுப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை குவித்தது.

- Advertisement -

இந்த மைதானத்தில் சற்று பேட்டிங் செய்ய சவாலாகவே இருந்த வேளையில் இந்திய அணி சார்பாக கேப்டன் ரோகித் சர்மா மட்டும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 101 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 87 ரன்கள் குவித்தார். பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் இந்திய அணி 100 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்ட ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் அவர் பெற்ற ஆட்டநாயகன் விருதின் மூலம் உலககோப்பை வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது சதம் அடித்திருந்த ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக இந்த தொடரில் அவர் ஆட்டநாயகன் விருதினை நேற்று வென்றிருந்தார். இந்த ஆட்டநாயகன் விருதின் மூலம் ரோஹித் சர்மா படைத்த சாதனை யாதெனில் :

இதையும் படிங்க : பர்ஸ்ட் பாகிஸ்தான்.. இப்போ இங்கிலாந்து.. உலககோப்பை வரலாற்றில் மோசமான நிலையை சந்தித்த – நடப்பு சாம்பியன்

இதுவரை ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரராக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 9 முறை ஆட்டநாயகன் விருதினை வென்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து இந்த பட்டியலில் ரோகித் சர்மா தற்போது ஏழாவது முறையாக ஆட்டநாயகன் விருதினை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்து கிளென் மெக்ராத் ஆறுமுறை ஆட்டநாயகன் விருதினை வென்று மூன்றாவது இடத்தில் உள்ளார். அதற்கடுத்து ஏபி டிவில்லியர்ஸ், சனத் ஜெயசூர்யா, கிரகாம் கூச், லான்ஸ் குளூஸ்னர், விவ் ரிச்சர்ட்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் தல ஐந்து முறை ஆட்டநாயகன் விருதினை வென்று நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement