பர்ஸ்ட் பாகிஸ்தான்.. இப்போ இங்கிலாந்து.. உலககோப்பை வரலாற்றில் மோசமான நிலையை சந்தித்த – நடப்பு சாம்பியன்

ENG-vs-PAK
- Advertisement -

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது கடந்த 2019-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதனை தொடர்ந்து நடப்பு சாம்பியனாக ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடரில் அரையிறுதிக்கு சென்று கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியானது இம்முறை அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி நிச்சயம் இந்த தொடரில் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு எதிராக மட்டும் வெற்றியை சந்தித்த இங்கிலாந்து அணியானது அதன் பிறகு ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை என வரிசையாக ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றி மற்றும் நான்கு தோல்விகள் என புள்ளி பட்டியலில் பின்னடைவை சந்தித்து இருந்தது.

இந்நிலையில் அக்டோபர் 29-ஆம் தேதி இன்று லக்னோ நகரில் நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியானது 100 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது ஐந்தாவது தோல்வியை சந்தித்துள்ளது. அதோடு இதுவரை 6 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள இங்கிலாந்து அணியானது ஐந்தாவது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, பங்களாதேஷ் போன்ற கத்துக்குட்டி அணிகளை விட ரன் ரேட் அடிப்படையில் பின்தங்கிய இங்கிலாந்து பத்தாவது இடத்தை பிடித்துள்ளது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி இன்று இந்திய அணிக்கு எதிராக அடைந்த தோல்வியின் மூலம் மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : டக் டக்குனு 3 விக்கெட் விழுந்ததும் கே.எல் ராகுலை வச்சி நான் பண்ண பிளான் இதுதான் – ஆட்டநாயகன் ரோஹித் சர்மா பேட்டி

அந்த வகையில் ஏற்கனவே ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து இருந்த இங்கிலாந்து அணியானது இன்று இந்திய அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்திக்க உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்து மோசமான நிலையை எட்டியுள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான அணியும் இதே போன்று தொடர்ந்து நான்கு தோல்விகளை சந்தித்து இருந்த வேளையில் தற்போது நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும் அந்த அவல நிலையை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement